பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

)ே அ.சீனிவாசன் 113

நாம் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினால் அதை முழுவதுமாகப் படித்து முடிக்க வேண்டும். ஒரு கவிதையோ, நூலோ கதையோ எழுதத் தொடங்கினால் அதை முழுவதுமாக எழுதி முடிக்க வேண்டும். ஒரு தொழிலைத் தொடங்கினால் ஒரு வீடு அல்லது ஒரு கட்டடத்தைத் கட்டத் தொடங்கினால் அதை அரைகுறையாக விட்டுவிடக் கூடாது.

ஒரு வேலையை எடுத்துக் கொண்டால் அதை முழுமையாக நிறைவேற்றி முடிக்க வேண்டும். ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டால் நமது சிந்தனையின் உச்சிக்குச் செல்ல வேண்டும். அதையே நுணியளவு செல் என்று கூறுகிறோம்.

ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு ஒரு பாடத்தைச் சொல்வதானால் கற்றுக் கொடுப்பதானால் குறிப்பிட்ட பாடத்தை முழுமையாக விவரித்துக் கற்பித்து முடிக்க வேண்டும்.

ஒரு கிணறு அல்லது குளம் வெட்டுகிறோம் என்றால் அதில் தண்ணிர் கண்டதா பாரை கண்டதா என்று பார்த்துவிட வேண்டும் என்று பழமொழி கூறுவார்கள். அந்த வகையில் அதை முற்றுப் பெற முடிக்க வேண்டும். எதையும் அரைகுறையாக விட்டு விட்டால் பலன் இல்லை. அதுவரை செய்த வேலை வீணாகிவிடும். அரைக்கிணறு தாண்டியதைப் போல் ஆகிவிடும் அதையே நுணியளவு செல் என்று பாரதி மிக அழகாகக் கூறுகிறார்.

59. நூலினைப் பகுத்துணர்

ஒரு நூலைப் படிப்பது என்பது அந்த நூலில் உள்ள விவரங்களையும் அதன் பொருளையும் தெரிந்து கொள்வதற்கும்

புரிந்துகொள்வதற்குமாகும்.

நூல்கள் என்பது அறிவுக் களஞ்சியமாகும். நமக்கு முந்திய காலத்தவரும் இக்காலத்தவரும் எக்காலத்தவரும் தங்கள் அனுபவங்களைக் கருத்துக் களை ஆராய்ச்சிகளை அறிவுகூர்மையுடன் பகுத்தும் தொகுத்தும் ஆய்வு செய்தும் பல முடிவுகளைக் கண்டும் எழுதி வைத்துள்ள அறிவுக் களஞ்சியமாகும். இவ்வாறான நூல்கள் எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.