பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 பாரதியின் புதிய ஆத்திசூடி 0

அவைகளைக் கற்றும் தெளிந்து நாம் பல அரிய செய்திகளை அறிகிறோம், அதன் மூலம் நமது அறிவை வளப்படுத்திக் கொள்கிறோம். இது வேறெந்த உயிரினத்திற்கும் இல்லாத மனிதப்பிறவிக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பாகும்.

இந்த அறிவிற்கு மொழியும் கல்வியும் ஆதாரமாக அமைந்துள்ளது. பழங்காலத்தில் இருந்து பல மொழிகள் வாயிலாக எழுத்துக்கள் சொற்கள் மூலமாக அனைத்து அறிவுத்துறை பற்றிய நூல்களும் வெளிவந்துள்ளன. இந்த நூல்கள் இலக்கியம், கவிதைகள், காவியங்கள், அறிவியல் கருத்துக்கள், அரசியல், பொருளியல், சமூகவியல் மற்றும் மனித சமுதாயத்தின் வளர்ச்சியை ஒட்டி பல்வேறு துறைகளும் வளர்ச்சி பெற்று அவை பற்றிய சிறந்த கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன.

இத்தகைய பல நூல்களைப் படிக்கும் போது அவைகளின் உண்மைப் பொருளை உணர்ந்து புரிந்து கொள்வது மட்டுமல்லாமல் பகுத்துணர்ந்து கற்றுத் தெளிய வேண்டும்.

படிப்பிற்கு நூல்களை அறிந்து கொள்வதற்கு கல்வியும் மொழிப்பயிற்சியும் மிகவும் அவசியமாகும். கல்வி முறையும் சமுதாயத்தின் வளர்ச்சியை ஒட்டி வளர்ச்சி அடைந்து கொண்டு வந்திருக்கிறது. மொழிகளும் காலத்தால் வளர்ச்சி பெற்று வளமடைந்து வந்திருக்கின்றன. இந்தக் கல்விப் பயிற்சியும் மொழிப்பயிற்சியும் நூல்களைக் கற்று பகுத்துணர்வதற்கு மிகவும் துணையாக இருக்கின்றன.

தமிழ்மொழி இலக்கணம் ஐந்திலக்கணமாகும். அவைகள் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்தாகும், இதில் பொருள் ஒரு இலக்கணப் பிரிவாக அமைந்திருப்பது தமிழ் மொழிக்குள்ள ஒரு தனிச்சிறப்பாகும். தமிழ் இலக்கண நூல்களில் ஒன்றாக நன்னூல் மாணாக்கர்களுக்கான இலக்கணத்தைப் பற்றிக் கூறுகிறது.

'அன்னம் ஆவே, மண்னொடு கிளியே இல்லிக்குடம் ஆடு, எருமை, நெய்யரி அன்னர்தலை இடைகடை மாணாக்கர்’