பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 பாரதியின்-புதிய-ஆத்திசூடி-9

61. நேர் படப்பேசு

சூது, வாது, வஞ்சனை, கபடம் இல்லாமல் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசக்கூடாது. நேர்படப் பேச வேண்டும். எந்த விஷயத்தையும் சுற்றி வளைத்துப் பேசக்கூடாது. நேரிடையாகப் பேச வேண்டும். இலக்கணத்தில் குற்றம் பத்து எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அவைகளில் குன்றக்கூறல், மிகபடக்கூறல், கூறியது கூறல், மாறுகொளக் கூறல், மயக்கக்கூறல் முதலிய பத்து குற்றங்கள் கூறப்பட்டு இருக்கின்றன. அவை இலக்கியத்தில் எழுத்துரைகளில் நாம் கையாள வேண்டிய இலக்கணக் கூறுகளாகும். இருப்பினும் அவற்றில் சில வாழ்க்கைக்கும் பொருந்துவதாகும்.

நேர்படப் பேசுதல் என்பது கள்ளத்தனம், கபடம் இல்லாமல் நேர்மையாகவும் நேருக்கு நேராகவும் ஒளிவு மறைவில்லாமல் நல்ல வார்த்தைகளில் பேசுவதாகும். அதையே பாரதி இளைஞர்களுக்கு அறிவுரையாகக் கூறுகிறார்.

62. நையப்புடை

நையப்புடை என்றால் நன்றாக அடித்து நொறுக்க வேண்டும் என்று பொருள். ஒன்றைத் தாக்க வேண்டுமென்று முடிவு செய்தால் நன்றாகத் தாக்க வேண்டும் என்று பொருள்.

ஒரு வேலையைச் செய்ய முற்பட்டால் அதை முழுமையாகச் சீராகச் செய்து முடிக்க வேண்டும் என்று பொருளாகும்.

நெல், சோளம், கம்பு, கேழ்வரகு, கோதுமை முதலிய தானியக் கதிர்களை அடிக்கும் போது நன்றாக முழுமையாக அடிக்க வேண்டும். அப்போது தான் தானிய மணிகள் அதிகமாக வும் முழுமையாகவும் உதிரும்.

ஒருவன் தொடர்ந்து வேண்டுமென்றே தவறு செய்கிறான் பல தடவை சொல்லியும் திருந்தவில்லை என்றால் தண்டனை கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றால் நையப்புடைத்தலும் ஒரு வழியாகும். -