பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பாரதியின் புதிய ஆத்திசூடி O

'நொந்தே போயினும் வெந்தேமாயினும் நந்தேசத்தார் உவந்தே சொல்வது வந்தே மாதரம் - ஜய வந்தே மாதரம்'

என்று பாரதி கூறியிருப்பது நொந்து போனாலும் கூட, சாகும் நிலையில் கூட நம் தேசத்தார் நமது நாட்டை மறந்து விடாமல் அதற்கு வணக்கம் செய்வார்கள் என்று கூறியுள்ளார்.

- நாம் நமது நாட்டையும் வீட்டையும் நொந்து போகாமல் காக்க வேண்டும்.

64. நோற்பது கைவிடேல்

நோற்பது என்பது நோன்பு மற்றும் விரதம் இருத்தல் என்பது பொருள். விரதம் எடுத்தலை உறுதி எடுத்தல் என்றும் கூறலாம். நாம் எல்லோருமே ஏதாவது ஒரு வகையில் நோன்பு இருந்து கோண்டு தான் இருக்கிறோம். பல விஷயங்களில் ஒன்றைச் செய்வதற்கு செய்து முடிப்பதற்கு உறுதி எடுத்துக் கொள்கிறோம்.

மதாபிமானிகள், மதச்சடங்குகளின் பகுதியாக நோன்புகளும் விரதங்களும் இருக்கிறார்கள். நமது நாட்டுப் பெண்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பல நோன்புகளும் விரதங்களும் இருக்கிறார்கள். உடல் நலத்திற்காக உண்ணா நோன்பு இருப்பதும் நமது நாட்டில் பழக்கமாகும்.

நாம் ஒரு வேலையைத் தொடங்கினால் அதை நன்றாகச் செய்து முடிக்க வேண்டும் என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். கருமமே கண்ணாக ஒரு வேலையில் ஈடுபடும் போது அவ்வேலையில் மெய்வருத்தம் பாரார், பசிநோக்கார், கண்துஞ்சார் என்று உறுதி கொண்டு அவ் வேலையை நிறைவேற்றி முடிக்கிறோம். -

நாட்டிற்காக நம்மை அர்ப்பணம் செய்து கொள்கிறோம். அது ஒருவகையில் உறுதி எடுத்துக் கொள்வதைப் போலாகும்.

ஒரு வேலையில் தனது முழு கவனத்தைச் செலுத்தி அக்காரியத்தைச் செய்து முடிக்க வேண்டும் என்று உறுதி