பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9-அ.சீனிவாசன் 119

எடுத்துக் கொண்டு கருமமே கண்ணாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு கடமை ஆற்றுவதற்கு நோற்பதைக் கைவிடாமல் அவ்வேலைகளைத் தொடர வேண்டும். இதையே நோற்பது கைவிடேல் என்று பாரதி குறிப்பிடுகிறார்.

65. பணத்தினைப் பெருக்கு

பணத்தினைப் பெருக்கு என்றால் ஒரு பேராசை பிடித்த தனிமனிதன் பல ஒவ்வாத முறைகளில் பணத்தைச் சேர்த்துப் பெட்டியில் போட்டுப் பூட்டுவதல்ல. நாட்டின் மொத்த உற்பத்திச் செல்வத்தை வீட்டின் மொத்த வருமானத்தை தனிநபர் வருமானத்தைப் பெருக்கி நாட்டு வளத்தைப் பெருக்குவதாகும்.

நாட்டின் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி முதல் நிலை உற்பத்தியை அதாவது ஆதார உற்பத்தியைப் பெருக்கி மனித உழைப்பின் மூலம் மறு உற்பத்தியைப் பெருக்கி நாட்டின் மொத்த செல்வத்தையும் வருமானத்தையும் அதிகப்படுத்த வேண்டும். இதன் மூலம் மக்களுக்குத் தேவையான உபயோகப் பண்டங்களும் அதிகமாகக் கிடைக்கும். அதுவே ஒரு நாட்டின் வளத்தைக் குறிப்பதாகும்.

நிலம். காடு. மலை, சுரங்கம், கடல் ஆகியவற்றிலிருந்து மனித முயற்சி மூலம் மனித உழைப்பின் மூலம் தேவையான ஏராளமான பொருள்கள் கிடைக்கின்றன. நிலத்தில் சாகுபடி செய்வதன் மூலம் சமுதாயத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள் தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருட்களான பருத்தி, சணல், கரும்பு, நிலக்கடலை, தேங்காய் முதலிய பொருட்களும் காய்கறி, கனி, மலர் முதலிய உபயோகப் பொருட்களும் கிடைக்கின்றன. இதை நிலத்திலிருந்து கிடைக்கும் முதல் நிலை உற்பத்திப் பொருட்செல்வம் என்று கூறுகிறோம்.

இந்த முதல் நிலை உற்பத்திப் பொருட்களிலிருந்து மறு உற்பத்தி மூலம் நேரடியாகச் சமுதாயத்திற்கு உபயோகிக்கும் வகையில் அரிசி, மாவு முதலியனவும், பருத்தியிலிருந்து பஞ்சு, நூ ல், துணி ஆடைகளும் சன லிலிருந்து கோணி முதலியனவும்கரும்பிலிருந்து சர்க்கரை முதலியனவும் மற்றும்