பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 - பாரதியின் புதிய ஆத்திசூடி O

பாரதியார் தனது கவிதைகளில் செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும், கல்வி வளரும் செல்வம் எட்டு எய்தல் ஆடுகள் மாடுகள் வீடுகள், நெடுநிலம், தொழில் பண்ணப் பெருநிதியம், அதில் பல்லோர் துணைபுரிதல் கூடும். திரவியத்தின் குவைகள் கோடி வகைத் தொழில்கள் நிலத்தின் கீழ் பல உலோகங்கள் நீரின் கீழ் எண்ணிலாத நிதி, மலை நதி காடுகள் உயிரினம், வெட்டுக்கனிகள், முத்துக்குளித்தல், கோதுமை, வெற்றிலை, பட்டினில் ஆடை, பஞ்சில் உடை, கட்டித் திரவியங்கள், ஆயுதம், காகிதம், ஆலைகள் கல்விச்சாலைகள் குடைகள் உழுபடைகள் கோணிகள் இரும்பாணிகள், வண்டிகள், கப்பல்கள், காவியம் செய்வோம், காடு வளர்ப்போம் கலை வளர்ப்போம், உலை வளர்ப்போம் ஒவியம் செய்வோம், ஊசிகள் செய்வோம் இரும்பைக் காய்ச்சுதல், யந்திரங்கள் வகுத்தல், கரும்பைச் சாறு பிழிதல் மண் எடுத்து குடங்கள் செய்தல் மரத்தை வெட்டி மனைகள் செய்தல் காய்கனி, நன்செய், பயிர், எண்ணெய், பால், நெய், இழையை நூற்று நல்லாடை செய்தல் முதலிய செல்வங்கள் செல்வ உற்பத்தி உழைப்பு ஆகியவை பற்றியெல்லாம் அவருடைய பல பாடல்களிலும் குறிப்பிடுவதைக் காண்கிறோம்.

அந்த வழியில் பணத்தினைப் பெருக்கு' என்று புதிய ஆத்திசூடியிலும் குறிப்பிடுகிறார்.

66. பாட்டினில் அன்பு செய்

இயற்கை சக்திகளின் அசைவிலிருந்து ஒலியும் தோன்றுகின்றன. அவைகளிலிருந்து இசையும் தோன்றியிருக்கிறது.

காற்றின் அசைவிலும் தண்ணிரின் சலசலப்பான ஒட்டத்திலும் நெருப்பின் சீற்றத்திலும், இடியின் ஒசைகளிலும் மரங்கள் செடி கொடிகளின் அசைவிலும், விலங்குகளின் குரலிலும் பறவைகளின் சத்தத் தி லும் நாம் இசையின் வடிவங்களைக் காண்கிறோம். ஆதி மனிதன் இவ்வாறு இயற்கையின் இசை வடிவங்களில் இருந்து பாட்டுகளையும்,