பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 பாரதியின் புதிய ஆத்திசூடி O

பண்டைச் சிறுமைகள் போக்கி என்னாவில் பழுத்த சுவைத் தெண்டமிழ்ப் பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே” என்று பாரதி விநாயகரை வேண்டுகிறார்.

நமது நாட்டின் தூய இசை மரபில் எல்லாவிதமான இசை முறைகளையும் பாட்டுக்களையும் வளர்க்க வேண்டும். நாட்டுப்பாடல் நாடோடிப்பாடல் முதல் செம்மைசால் இசைப்பாட்டுகள் வரை நமது பாட்டினில் அன்பு செய்து வளர்ப்போம்.

பாட்டுக்கள் இயற்றுபவர்களை பாட்டுகளுக்கு இசையமைப்பவர்களை பாட்டுகளைப் பாடுபவர்களையும் பாராட்ட வேண்டும். ஊக்கப்படுத்த வேண்டும் பாட்டுகள் மனிதனுக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தருகின்றன. உடலில் தெம்பையும் ஊக்கத்தையும் கொடுக்கின்றன. பாட்டுகளும் அதன் கருத்துக்களும் மனிதனுக்கு அறிவை ஊட்டுகின்றன. அறிவைப் பெருக்கி வளர்க்கின்றன.

மனிதன் தனது அன்றாட உழைப்பை முடித்தவுடன் அவனுக்கு ஓய்வும் நிம்மதியும் தேவைப்படுகிறது. அது அவனை மறுநாள் உழைப்பிற்குத் தயார்ப்படுத்துகிறது. அதற்கு இசையும் கலையும் இலக்கியமும் பாட்டும் அவசியமாகிறது.

இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழாகத் தமிழை வளர்த்த இப்பூமியில் பாட்டினில் அன்பு செய்து போற்றி வளர்ப்போமாக.

67. பிணத்தினைப் போற்றேல்

பிணம் என்றால் காலம் முடிந்த மனிதன். காலம் முடிந்து விட்ட அத்தனைப் பொருளும் பிணத்தைப் போன்றதேயாகும்.

H பிறந்த அத்தனை உயிர்ப் பொருட்களும் சாவது என்பது உறுதியானது. மனிதன் இறந்தவுடன் அது பிணமாகிறது. பிணத்தை வைத்துக் கொண்டு சிலர் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள், குதிக்கிறார்கள், கதறுகிறார்கள், கத்துகிறார்கள், அழுகிறார்கள், கொட்டு அடித்து கூக்குரல் போடுகிறார்கள்.