பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பாரதியின் புதிய ஆத்திசூடி O

கண்களுக்கு வெளியிலிருந்து வரும் அபாயங்களையும் கேடுகளையும் இமைகள் காக்கின்றன. அதே சமயம் வெளித் தொடர்பும் உடம்பின் உள் நிலைமையும் இணைந்து கண்களுக்குக் கேடு அல்லது நோய் வரும் போது கண்ணிரும் அது முற்றியதன் அடையாளமாக பிழையும் வருகிறது. கண்ணுக்கு வரும் கேட்டை பீழை உணர்த்துவதைப் போல சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் வரும் கேட்டையும் பீழை என்றும் சிலர் குறிப்பிடுகிறார்கள். அத்தகைய கேடுகளுக்கு இடம் கொடுக்கக்கூடர்து.

கண்பார்வை புலன் உணர்வுகளில் மிக முக்கியமானது. கண்பார்வை மூலம் தெரிவதை அறிவதை இதர புலன் உணர்வுகளுடன் இணைத்து நாம் அறிவைப் பெருக்குகிறோம்.

அத்தகைய அறிவு மிக்க கண்களைக் கூர்மையான கண்கள் என்று கூறுகிறோம். புத் தி கூர்மையுடன் கண்களை இணைக்கிறோம். கோபம், சாந்தம் ஆகியவற்றைக் கண்கள் மூலம் தெரிவிக்கிறோம், வருத்தம் மகிழ்ச்சி, அழுகை ஆனந்தம் ஆகியவை கண்கள் மூலம் வெளிப்படுகின்றன. பெண்களுடைய கண்களைக் கூரிய வேலுக்கு ஒப்பமாகக் கூறப்படுகிறது.

கூரிய கண்களின் பார்வை ஊடுருவிச் சென்று காணும் தன்மை படைத்தது. அத்தகைய அன்புக் கண்களை அறிவுக் கண்களைக் கண்ணைப் போல் காக்க வேண்டும் - கண்களை எந்த விதமான துன்பமும் ஏற்படாமல்

ஆரோக்கியத்துடன் பாதுகாக்க வேண்டும்.

கண்களில் பீழை ஏற்படுவது கண் நோய்க்கு அறிகுறியாகும் அத்தகைய துன்பத்திற்கு இடம் கொடுக்காமல் அதற்குரிய சிகிச்சைகளைச் செய்து கண்களைப் பாதுகாக்க வேண்டும்.

பீழை என்றால் பெருந் துன்பம் என்று பொருளாகும். அதனால் தான் கண்ணுக்கு வரும் துன்பத்தைப் பீழை என்று குறிப்பிடுகிறார்கள். பீழைக்கு இடம் கொடேல் என்றால் பெருந்துன்பங்களுக்கு இடமளிக்கக் கூடாது என்று பொருளாகும்.

இயற்கையால் ஏற்படும் துன்பங்கள் பேரிடி பெருமழை பேய்க்காற்று, பொங்கும் கடல், பனி மழை, பெருவெள்ளம் வறட்சி