பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 அ.சீனிவாசன் 127

முதலியவற்றால் ஏற்படுகின்றன. இவைகளால் ஏற்படும் துன்ப துயரங்களைக் குறைப்பதற்கு தணிப்பதற்குக் கூட்டு முயற்சிகள்

செய்யப்பட வேண்டும்.

இனிச் செயற்கையால் ஏற்படும் கொடும் துன்பங்கள் போர்கள் உள்நாட்டுச் சண்டைகள் அடிதடி சண்டைகள் சாதிச் சண்டைகள் மதச் சண்டைகள் இனச் சண்டைகள், மொழிச் சண்டைகள், பொய், களவு, சூது, போட்டி, பொறாமைகள் மூலம் ஏற்படும் சண்டைகள் முதலியவைகளைத் தவிர்ப்பதற்கு தடுப்பதற்கு, அறிவு வழியில், அன்பு வழியில், மனித நேயத்துடன் மனிதப் பண்பாட்டுடன் பேசி தீர்வு கண்டு இணக்கங்களைக் கொண்டு வர வேண்டும்.

அடுத்தபடி தனிமனித உறவுகளில் பொய், நட்பு, கூடா நட்பு சிறியோர் நட்பு, தீயோர் நட்பு முதலிய பலவகை உறவுகள் தொடர்புகளினால் ஏற்படும் துன்பங்கள் கொடும் துன்பங்களாகும். இவை ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவையும் பொருந்தக் கூடியவையுமாகும். இத்தகைய துன்பங்களை அறிவால் நல்லொழுக்கத்தால் சீரிய கட்டுப்பாடுகள் மூலம் தவிர்க்க வேண்டும். அத்தகைய துன்பங்கள் வருவதைக் தடுக்க வேண்டும் அப்பிழைகளுக்கு இடமளிக்கக்கூடாது.

இன்னும் உடல் நோயினால், சுகாதாரக் கேடுகளினால், போதுமான உணவின்மையால், சுற்றுச் சூழல் கேடுகளால் தனிமனிதனுக்கு ஏற்படும் துன்பங்களுக்கு இடம் கொடுக்காமல் தடுக்க வேண்டும்.

இத்தகைய துன்பங்களுக்கு இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும். வரும் துன்பங்களைத் தணிக்க வேண்டும். தவிர்க்க வேண்டும். தடுக்க வேண்டும். இதையே பாரதி பீழைக்கு இடம் கொடேல் என்று கூறுகிறார்.

69. புதியன விரும்பு

'பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையினானே'

என்பது நன்னூல் இலக்கணச் சூத்திரமாகும். கால