பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O அ.சீனிவாசன் 131

பூமி, நாம் அதன் மக்கள், இந்த பூமியை நாம் இழந்து விடக் கூடாது என்று பாரதி பேசினார்.

இப்போது நாம் விடுதலை பெற்றுவிட்டோம். அன்னியர்களிடம் இருந்து நமது நாட்டை மீட்டு விட்டோம். இதை நாம் காக்க வேண்டும்.

பூமி என்னும் போது இதை இப்போது உலக அளவில் நாம் காண வேண்டும். இன்றைய உலகிற்கு இந்த பூமிக்கு மிகப் பெரிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது. பல விதமான அபாயங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

உலகை முதலாவதாக அணுகுண்டுகள், அணு ஆயுத சோதனைகளிலிருந்து காப்பாற்ற வேண்டும். இரண்டாவதாக நமது பூமிக்கு ஏற்பட்டுள்ள அடுத்த அபாயம் சுற்றுச் சூழல்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயமாகும்.

நமது பூமி கடல், காற்று, ஆறுகள், மலை, காடுகள் ஆகியவைகளில் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. காடுகளும், மலைகளும், மரங்களும், தாவரங்களும் விலங்குகளும் இதர பலவகை உயிரினங்களும் பாதிக்கப்பட்டு அழிந்து கொண்டிருக்கின்றன. ஆகாயம் பாதிக்கப்பட்டு தட்ப வெப்ப நிலை பருவமழை ஆகியவை சிதைந்து கொண்டிருக்கின்றன. நகரங்களில் ஜன நெருக்கடி அதிகமாகி மக்களுடைய வாழ்க்கைக்கே அபாயத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது, உலகின் மொத்த உணவு உற்பத்தி குறைந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் வறட்சி, மறுபக்கம் வெள்ளம், இத்தகைய இயற்கைச் சூழல் அபாயங்கள் அதிகரிக்குமானால் நமது பூமியை நாம் இழந்து அழியும் அபாயம் ஏற்படும். எனவே நாம் வாழும் இந்த பூமியை இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் முக்கால் வாசிபேர் சிறிய அளவில் சொந்த நிலம் வைத்துள்ள சிறிய நடுத்தர விவசாயிகளேயாவர். அவர்கள் தங்கள் நிலத்தை இழந்து விடும் அபாயங்கள் அதிகரித்து வருகின்றன. அவர்களுக்கு இன்றைய