பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 பாரதியின்-புதிய-ஆத்திசூடி-O

சூழ்நிலையில் நாட்டின் பொருளாதார உறவு நிலையில் ஏற்ற தாழ்வுகள் அதிகரித்து விவசாயிகள் கடன்பட்டும் அவர்கள் விளை விக்கும் விளை பொருள்களுக்கு போதிய விலையில்லாமலும், சாகுபடிச் செலவுகள் அதிகரித்தும், கடன் கட்ட முடியாமலும் தங்கள் சொந்த நிலத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு ஏழை விவசாயி தனக்குள்ள பூமியை மிகவும் கவனத்துடன் கருத்துடன் பாதுகாத்துப் பேணுகிறான். ஏனென்றால் அந்த பூமி அவனை வாழ வைக்கிறது.

தசரதனுடைய ஆட்சியைப் பற்றி கம்பன் மிகவும் அழகான ஒரு உவமையுடன் கூறுகிறார்.

'வையகம் முழுவதும் வறிஞர் ஒம்பும் ஒர் செய் எனக்காத்து இனிது அரசு செய்கின்றான்'

என்று கூறுகிறார்

செய் என்றால் சிறிய அளவிலான பூமி, நிலம், நன்செய், புன்செய் என்று குறிப்பிடுகிறோமல்லவா? ஒரு அறிஞன் தனக்குள்ள செய் நிலத்தை மிகவும் கவனத்துடன் காப்பதைப் போலத் தசரதன் இந்த வையகத்தை காத்தான் என்று பொருளாகும்.

பூமியை இழந்திடேல் எனப் பாரதி கூறுவதை நாம் அதன் விரிவடைந்த பொருளில் புரிந்து கொள்ள வேண்டும்.

71. பெரிதினும் பெரிது கேள்

பாரதி புதுமையை விரும்பினார், பழைய, பல, காலம் கடந்து போன கருத்துக்களை நிராகரித்தார். அவர் புதிய ஆத்திசூடியை எழுதியதே அந்த நோக்கத்தில் தான். போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்பது பழைய வாக்கு. அதை மறுத்து பெரிதினும் பெரிது கேள் என்று கூறுகிறார். மீதுண் விரும்பேல் என்னும் பழைய வாக்கிற்கு மாறாக ஊண் மிக விரும்பு என்று பாரதி கூறினார். நன்றாக சாப்பிடு என்றார். அப்போது தான் உடல் வலுவாக இருக்கும்.