பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 அ.சீனிவாசன் 133

பெரிதினும் பெரிது என்று கூறும் போது எதையும் பெரிதாகவே நினைக்க வேண்டும். பெரிய லட்சியங்களையே நினைக்க வேண்டும். உயர்ந்த கோட்பாடுகளையே கருத வேண்டும். உயர்ந்த எண்ணங்களையே கொள்ள வேண்டும்.

நமது வாழ்க்கை வளமுடன் இருக்க வேண்டும். அதற்கு நமது தேவைகள் நிறை வேற வேண்டும். கோருவது குறைவாக ஏன் கோர வேண்டும். எல்லாம் வேண்டும், தேவைகள் எல்லாம் நிறைவேற வேண்டும்.

இவ்வாறு வேண்டும் போது ஒரு தனிமனிதனுக்கு மட்டுமல்ல, சமுதாயத்திலுள்ள எல்லா தனிமனிதர்களுக்கும் ஆகும். அத்தகைய சிந்தனை நமது குழந்தைகளுக்கு ஏற்பட வேண்டும்.

'பண்டைச் சிறுமைகள் போக்கி

என்னாவில் பழுத்த சுவைத்

தெண்டமிழ்ப் பாடலொரு கோடி மேவிடச்

செய்குவையே’

என்று ஒரு கோடி பாடல் பாட வரம் கேட்கிறார். பெரிதினும் பெரிது கேட்கிறார்.

'பூமண்டலத்தில் அன்பும் பொறையும்

விளங்குக, துன்பமும் மிடிமையு நோவும்

சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்

இன்புற்று வாழ்க’

என்று விநாயகரைப் பெரிதினும் பெரிது கேட்டு பாரதி பாடுகிறார்.

‘'வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே நூறு வயது புகழுடன் வாழ்ந்துயர் நோக்கங்கள் பெற்றிட வேண்டுமென்றே ’’ என்று உயர்ந்த சிந்தனைகளும் பாடி, பாரதி நமக்கும் பெரிதினும் பெரிது கேட்க வழி காட்டுகிறார்.