பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பாரதியின்-புதிய-ஆத்திசூடி-9

72. பேய்களுக்கஞ்சேல்

பேய்கள் என்பது கிடையாது. அது வெறும் கற்பனை. அது வெறும் மிரட்சி நமது மக்கள் பேய், பேய், என்று மூடநம்பிக்கைகளை ஊட்டிவிட்டார்கள், பேய் என்று கூறி பயத்தை உண்டாக்கி விட்டார்கள். அந்த பொய்ப் பேய்களுக்கு நாம் பயப்படக்கூடாது.

பாரதியின் இந்த வழியில் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யணசுந்தரமும் பாடியுள்ள ஒரு பாட்டை இங்கு நினைவு கூறலாம்.

1952ஆம் ஆண்டில் ஒரு தடவை ஒரு நாடகம் நடத்துவதற்காக கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு நாடகக் குழுவுடன் ரீவில்லிபுத்துருக்கு வந்திருந்தார். மாலை நேரம். நானும் கவிஞரும் ரயில் நிலையத்திற்குச் செல்லும் சாலையில் நடந்து கொண்டிருந்தோம். அப்போது ஒரு தாயும் அவருடைய குழந்தையும் சாலையில் போய்க் கொண்டிருந்தார்கள். தாய் சற்று வேகமாக முன்னே சென்று விட்டார். குழந்தை மெதுவாக நடந்து பின் தங்கியிருந்தான். சாலையின் ஒரத்தில் ஒரு பழைய வேப்பமரம், தாய் தன் மகனைப் பார்த்து குரல் கொடுக்கிறாள். அடே சீக்கிரம் வாடா, அந்த வேப்ப மரத்திலே பேய் இருக்குடா, சீக்கிரம் வாடா என்று குரல் கொடுத்தார், வானம் மேக மூட்டமாக இருந்தது, மாலை வெளிச்சம் மங்கலாக இருந்தது, நாங்கள் இருவரும் காற்று வாங்கிக் கொண்டு, சாலையின் ஒரத்தில் இருந்த ஒரு பாலத்தின் சுவற்றில் உட்கார்ந்திருந்தோம். கவிஞர், அந்தத் தாயின் வர்த்தைகளைக் கேட்டுவிட்டு தனது தொடையில் தாளம் போட்டுக் கொண்டே சிந்தித்துக் கொண்டருந்தார். சற்று நேரத்தில் ஒரு பாட்டை முணுமுணுத்தார்.

வேப்ப மரத்தின் உச்சியின் மீது பேய் ஒண்ணு இருக்குதுண்ணு சொல்லி வைப்பாங்க, உன் விரத்தை இளமையிலேயே கிள்ளி வைப்பாங்க சின்னப்பயலே, சின்னப்பயலே சேதி கேளடா