பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 அ.சீனிவாசன் 135

-

மூளையற்ற இந்த வார்த்தைகளை

விளையாட்டாகக்கூட நம்பிவிடாதே’’

என்று பாடத் தொடங்கினார். அவ்வரிகளே பிற்காலத்தில் பிரபலமான சினிமா பாடலாயிற்று.

பாரதியின் புதிய ஆத்தி சூடி பேய்களைக் கண்டு அஞ்சாதே’ என்று தெரிவிக்கிறது. பேய் என்பது பொய். அந்தப் பொய்யை நம்பி அதைக் கேட்டு பயப்படக்கூடாது. - **

பொய்யான பேய்கள் மட்டுமல்ல சில மனிதப் பேய்களும் இருக்கின்றன. பேய்கள் என்பது கொடுமையானவைகளாகச் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றன. அவை கற்பனையானவை. பேய்களும் பேய்க்கதைகளும் கற்பனையானவை, அவை கட்டுக் கதைகள், அவைகளை நம்ப வேண்டாம், பொய்யான பேய்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். அவ்வாறே மனிதப் பேய்களைக் கண்டும் நமது குழந்தைகள் அஞ்சவேண்டாம்.

73. பொய்மை இகழ்

பொய் சொல்லக் கூடாது பாப்பா என்று பாரதி பாப்பாவுக்குக் கூறுகிறார். அத்துடன் பொய்யை இகழ் என்று வலியுறுத்துகிறார். பொய்மை எங்கிருந்தாலும் சரி, அதைக் காரி உமிழ வேணடும். அதை நம்பக்கூடாது என்பது மட்டுமல்ல. அதை இகழ்ந்து நிராகரிக்க வேண்டும்.

'பயமெனும் பேய்தனை யடித்தோம் - பொய்மைப்

பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்’

என்று பொய்மையைப் பாம்பிற்கு ஒப்பிட்டு அதன் உயிரைக் குடித்து கொன்று வீச வேண்டும் என்று பாரதி வலியுறுத்திக் கூறுகிறார்.

'பொய்மை கூறலஞ்சுலாய் வா வா வா’’ என்றும்

'பொய்மை நூல்கள் எற்றுவாய் வா வா வா'

என்றும் பாரதி வருகின்ற பாரதத்தை அழைக்கிறார்.