பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2_அ.சீனிவாசன் 3

பாரதி கருதினார் போலும், அதனால் அவர் புதிய ஆத்திசூடி பாடினார். --

பாரதியின் புதிய ஆத்திசூடியை நமது நாட்டின் ஆரம்பப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் சேர்த்து நமது குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க அரசு முன்வர வேண்டும். இப்பாடல்களைப் பள்ளிகளுக்கான பாடத் திட்டத்தில் சேர்ப்பதற்கு கல்வித்துறைச் சான்றோர்கள் முன்வர வேண்டும். அரசும் ஆவன செய்ய வேண்டும்.

பாரதியார் பல பாடல்களும் எழுதியதற்கு சில காரணங்களும் கதைகளும் சொல்லப்படுகின்றன, அவை பெரும்பாலும் வாய்வழிச் செய்திகளாகவே உள்ளன.

ஒரு சமயம் பாரதியார் கடயத்திலிருந்து ஆம்பூருக்கு வந்து கொண்டிருந்தார், ஆம்பூருக்கு (நெல்லை மாவட்ட ஆம்பூர்) வந்தபோது நண்பகல் 12.00 மணியாகி விட்டது. நடந்தே வந்த காரணத்தால் களைப்பும் பசியும் அதிகமாக இருந்தது. பிராமணர் தெரு வழியாக வந்து கொண்டிருந்த போது அங்கே ஒரு பிராமணர் வீட்டில் திருமண விருந்து நடந்து கொண்டிருந்ததைக் கண்டார், பசியோடு இருந்த பாரதியும் பந்தலுக்குள் சென்று பந்தியில் உட்கார்ந்து கொண்டார். பரிமாறப்பட்டன, அப்போது திருமண வீட்டுப் பெரியவர் பந்தியைச் சுற்றிப் பார்த்துக் கோண்டு வந்தாராம். அப்போது பாரதியும் பந்தியில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறார், உடனே அவர் பதட்டத்துடன் பாரதியைப் பார்த்து, 'இவனை யார் உள்ளே விட்டது. இவன் பள்ளு, பறை பல சாதிகளோடு திரிவபனாச்சே, தீட்டுப்பட்டு விட்டதே ஆச்சாரம் கெட்டுப் போச்சே” என்று கோபமாக பாரதியின் கையைப் பிடித்து இழுத்து பந்தியை விட்டும், பந்தலை விட்டும் வெளியேற்றி விட்டாராம், பாரதிக்குக் கடுங்கோபம். இருப்பினும் அந்த இடத்தை விட்டு வெளியேறி விட்டார். அதையொட்டித் தான்,

"குத்திரனுக்கு ஒரு நீதி தண்ட சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி என சாத்திரம் சொல்லிடுமாயின்