பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பாதியின்-புதிய-ஆத்திசூடி-O

வேண்டியிருந்தது. பாரதி விடுதலை இயக்கத்தில் இந்திய தேசிய காங்கிரசின் தீவிரவாதப் பிரிவை ஆதரித்த போதிலும், எல்லா வகையான போராட்டங்களையும் பொதுவாக ஆதரித்தார். பாராட்டினார் என்றே கூற வேண்டும். கிருஷ்ணனும் அர்ஜுனனுமே அவருடைய முக்கியமான கதாபாத்திரங்களாகும்.

நமது நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ராணுவத்தின் பங்கு மிக முக்கியமானதாகும். 1757 ஆம் ஆண்டின் பிளாசி யுத்தம் முதல் 1857 ஆம் ஆண்டின் முதலாவது சுதந்திரப் போராட்டம் வரை அன்னிய ஆட்சிக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிரான போராட்டங்கள் அனைத்தும் ஆயுதம் தாங்கிய போராட்டங்களாகவே இருந்தன. 1857 ஆம் ஆண்டின் முதலாவது இந்திய சுதந்திரப் போராட்டமும் சிப்பாய்க் கலகம் என்னும் பெயரில் ராணுவ வீரர்களும் மக்களும் கலந்த போராட்ட மாகவே இருந்தது. அதன் பின்னரும் கார்வாலி ராணுவ வீரர்களின் பங்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தலைமையில் இந்திய தேசிய ராணுவம் கடைசியாக 1946 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய விமானப்படை, கப்பல் படை வீரர்கள் நடத்திய போராட்டம் ஆகியவை இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கினை வகித்துள்ளது.

விடுதலைப் போராட்ட காலத்தில் பாரதி நமது இளைஞர்களுக்கு போர்த்தொழில் பழகு’ என்று அறிவுரை கூறியுள்ளது இப்போதும் பொருந்தும். *

நாட்டைக் காக்க நாட்டின் சுதந்திரத்தைப் பேணிக்காக்க நாடடின் அமைதியைக் காக்க நாட்டின் எல்லைகளைக் காக்க உள் நாட்டுத் தொல்லைகளை நீக்க நமது குழந்தைகள் அனைவருக்கும் போர்ப்பயிற்சி கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

75. மந்திரம் வலிமை

மந்திரம் கற்போம், வனத்தந்திரம் கற்போம் என்பது

பாரதியின் வாசகம் அம்மந்திரம் வலிமையானது என்று கூறுகிறார்.

பாரத நாட்டுக் கொடியைப் பற்றிய பாடலில்.