பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O அ.சீனிவாசன் 139

'மந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன்

மாண்பை வகுத்திட வல்லவன் யானோ'

என்று குறிப்பிடுகிறார். தேசிய விடுதலை இயக்க காலத்தில் வந்தே மாதரம், ஜெய்ஹிந்த், சத்தியமேவ ஜயதே என்னும் சொற்கள் எல்லாம் மக்கள் ஒலிக்கும் மந்திரங்களாயின. சத்தியமேவ ஜயதே - வாய்மையே வெல்லும் என்னும் சொல் நமது நாட்டின் தாரக மந்திரமாகி உள்ளது. இந்தச் சொல் மிகவும் வலுவுள்ளதாகும் பொருள் நிறைந்ததாகும்.

மந்திரங்கள் எல்லாம் மாய மந்திரங்கள் அல்ல. மந்திரம் போலியாகக் கூறப்படும் பொய் மந்திரங்கள் அல்ல. மந்திரம் என்றால் அறியாமையில் உள்ள மக்கள் பகுதியில் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டவோ அல்லது ஏமாற்றவோ முனு முணுக்கப்பட்ட மந்திரங்களல்ல.

'மந்திரவாதியென்பார் - சொன்ன மாத்திரத்திலே மனக்கிலி பிடிப்பார்’

என்று பாரதி குறிப்பிடுகிறார். அதேபோல நடிப்பு சுதேசிகள் என்னும் பாடலில்.

'யந்திரசாலைகள் என்பார்

எங்கள் துணிகள் என்பார்

மந்திரத்தாலே யெங்கும் - கிளியே

மாங்கனி வீழ்வதுண்டோ’’

என்று கூறுகிறார்.

சில மந்திரவாதிகள் மந்திரத்திலே மாங்கனியைக் காட்டுவார்கள். அது பொய்யானது அதனால் தான் நமது நாட்டில் அறிவார்ந்த மக்களிடத்தில் மந்திரத்தில் மாங்கனி விழுவதில்லை’ என்னும் பழமொழி வந்துள்ளது.

பாரதி இங்கு குறிப்பிடும் மந்திரம் வலிமை என்பது வலிமையான மந்திரமாகும்.