பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 பாரதியின் புதிய ஆத்திசூடி 0

'மந்திரம் கோடி இயக்குவோன் நான் இயக்கு பொருளின இயல்பெலாம் நான் தந்திரம் கோடி சமைத்துளோன் நான் சாத்தி வேதங்கள் சாற்றினோன் நான்'

என்று குறிப்பிடும் வல்லமை மிக்க கோடி மந்திரமாகும்.

திருமூலர் தமிழில் எழுதியுள்ள திருமந்திரம் மூவாயிரம் பாடல்களைக் கொண்டதாகும் அவை சைவ சித்தாந்த வாழ்க்கை நெறிமுறையின் தத்துவங்களாகும். மிகவும் அருமையான தமிழ்நூல் அதை நாம் படிக்க வேண்டும்.

மந்திரம் என்பதில் இருந்து தான் மந்திரி என்னும் சொல் வந்திருக்கிறது. மந்திரி என்றால் அமைச்சர் என்று பொருள் மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல் என்று ஒரு சொல் உண்டு. அரசும் அமைச்சரும் இணைந்த ஆட்சி. அமைச்சு நன்றாக திறமையாக நேர்மையாக அமைந்திருந்தால் தான் ஆட்சி வலுவாக இருக்கும்.

மந்திரம் என்பது வேதம், மந்திரம் என்பது தத்துவம் மந்திரம் என்பது அரசு இயல், மந்திரம் என்பது ஆட்சியியல் மந்திரம் என்பது அறிவியல், மந்திரம் என்பது வாழ்க்கை நெறியியல், மந்திரம் கோடி, எண்ணிலடங்காது அதை நாம் நன்கு கற்க வேண்டும். அது நமக்கும் நமது நாட்டிற்கும் வலிமையைக் கொடுக்கும்.

76. மானம் போற்று

'ஞானத்திலே பரமோனத்திலே - உயர் மானத்திலே அன்ன தானத்திலே

கானத்திலே அமுதாக நிறைந்த கவிதையிலே உயர்நாடு . பாருக்குள்ளே நல்ல

நாடு, எங்கள் பாரத நாடு’’

என்று பாரதி பாடுகிறார்.