பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O அ.சீனிவாசன் 141

மானத்திலே உயர்ந்த நாடு பாரத நாடு என்று பாரதி குறிப்பிடுகிறார். மானம் என்பது மனித கவுரவம். மானம் மரியாதை என்று இணைத்துச் கொல்வதுண்டு. ஒருவர் நம்மை தரக்குறைவாகப் பேசிவிட்டால் நம்மை அவமானப்படுத்தி விட்டார் என்று கூறுகிறோம். மானத்திற்கு எதிர்பதம் அவமானம்.

மானம் என்னும் மனித கவுரவம் ஒருவருடைய கல்வி, பண்பாடு, நன்னடத்தை முதலியவைகளில் அடங்கியிருக்கிறது. தானம் , வேள்வி, தவம், கல்வி, வீரியம் ஆண்மை, நன்னேர்மை, வன்மை ஆகியவற்றுடன் சேர்த்து மானம் என்றும் பாரதி குறிப்பிடுகிறார்.

'ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்

நல்ல பாரதத்திடை வந்திர்

ஊனம் இன்று பெரியது இழைக்கின்றீர்

ஒங்கு கல்வி உழைப்பை மறந்திர்

மானமற்று விலங்குகள் ஒப்ப

மண்ணில் வாழ்வதை வாழ்வெனலாமோ?

என்று பாரதி அடிமை இந்தியாவில் வாழ்ந்த மக்களின் தன்மானத்தைத் தட்டி எழுப்புகிறார்.

'மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும் ஈனர்க்குலகந்தன்னில் - கிளியே இருக்க நிலைமையுண்டோ?

என்று பாரதி நடிப்புச் சுதேசிகளைச் சாடுகிறார்.

நான்கு பேர் போற்றும்படியாக நாம் நடந்து கொள்ள வேண்டும். நாம் பொய், களவு சூது, காமம், வஞ்சகம், துரோகம் முதலிய பாதகங்களைச் செய்தால் அதன் மூலம் மற்றவர்களுக்கு கேடு விளைவிக்கிறோம். அது கூடாது. அவைகளைச் செய்தால் மற்றவர்கள் நம்மைத் துாற்றுவார்கள். அப்போது நமக்கு மற்றவர்களிடம் மதிப்பு குறைகிறது. அவமானம் ஏற்படுகிறது.