பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 அ.சீனிவாசன் 143

பெருமையடைய வேண்டும். அத்ததைய முறையில் நமது நல்ல பண்பாடுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பொருளாகும். i

77. மிடிமையில் அழிந்திடேல்

'பாரதத்திடை யன்பு செலுத்துதல்

பாபமோ - மனஸ் - தாபமோ

கூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பது

குற்றமோ - இதிற் - செற்றமோ’’

என்று பாரதி ஆங்கிலேயனிடம் தேசபக்தன் கூறுவதாகப் பாடுகிறார்.

பாரத நாட்டின் மீது அன்பு செலுத்துவோம், எங்கள் மிடிமையைப் போக்குவோம் என்று கூறுகிறார்.

மிடிமை என்றால் சோம்பேறித்தனம், மலையாள மொழியில் மடி என்று கூறுவார்கள். சோம்பல் மிகக் கெடுதி. சோம்பல் மிகக் கெடுதி பாப்பா - தாய் சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா என்று பாரதி பாப்பாவுக்குப் பாடுகிறார். எப்போதும் நாம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். நாம் எப்போதும் ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டேயிருக்க வேண்டும்.

உலகில் உள்ள சகல பொருள்களும் சகல உயிரினங்களும் சதா செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தண்ணிரில் உள்ள மீன்கள் இடைவிடாமல் அசைந்து கொண்டே இருக்கின்றன. பறவைகள் விலங்கினங்கள் எல்லாம் இடைவிடாமல் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

குதிரை உட்காருவதே இல்லை. சதா நின்று கொண்டே இருக்கிறது மனிதன் இட்ட வேலைகளைச் செய்கிறது. கொம்பு இல்லாவிட்டாலும் போர்க்களத்தில் நிற்கிறது. யானை எப்போதும் அசைந்து கொண்டே இருக்கிறது. எறும்பு கூட எப்போதும் சுறுசுறுப்பாகவே வேலை செய்து கொண்டே இருக்கிறது.

அறிவார்ந்த மனிதன் சோம்பித் திரியக் கூடாது அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். எழுந்தவுடன் படிக்க