பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பாரதியின் புதிய ஆத்திசூடி 0

அது சாத்திரமன்று சதி என்று கண்டோம்”

என்றும் பாடலை பாரதி எழுதியதாக கூறப்படுகிறது, சாத்திரச் சதியென்றும் போலிச் சுவடிகள் என்று பாரதி வேறு பல பாடல்களிலும் கூறுவதைக் காணலாம்.

இப்படியாக பாரதியின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல நிகழ்ச்சிகளைப் பற்றிய பல செய்திகளும் கதைகளும் உள்ளன.

பாரதியார் சில காலம், மிகவும் குறுகிய காலம் தான் சென்னை தம்புசெட்டி தெருவில் உள்ள முத்தியாலுபேட்டை உயர்நிலைப் பள்ளி யில் (இப்போது மேல்நிலைப் பள்ளி) தமிழாசிரியாராக வேலை பார்த்தார். அக்காலத்தில் ஒருநாள் மாலையில் பள்ளிப் பணிகள் முடிந்த பின்னர், அருகில் உள்ள காளி காம்பாள் கோவிலுக்குச் சென்று, காளி தரிசனம் செய்துவிட்டு தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தார், அப்போது தெருத்திண்ணை ஒன்றில் ஒரு வயதான பெரியவர் தனது பேரப்பிள்ளைக்கு ஒளவையாரின் அத்தி சூடி பாடல்களைச் சொல்லிக் கொடுத்துக் கோண்டிருந்தார். சிறுவன் படிக்க மறுத்துக் கொண்டிருந்தான். விளையாட்டில் கவனம் இருந்தது போலும். தாத்தா, பேரனை அடித்து பாடல்களைப் படிக்கும்படி வறுபுறுத்திக் கொண்டிருந்தார். பையன் அழுதுகொண்டே அறம் செய விரும்பு' ஆறுவது சினம் என்று சொல்லி நிறுத்திக் கொண்டான். மேலும் அந்தப் பெரியவர் பையனை அடித்துக் கொண்டே “சொல்லுடா, இளமையிற் கல்” என்று சொல்லி கொடுத்துக் கொண்டிருந்தார். பையனும் அழுதுகொண்டே படிக்க முடியாது போ என்று குமுறி கொண்டிருந்தான். பெரியவர் அடிக்க, சிறுவன் அழ “இளமையிற் கல்” படிப்பு அப்படியே நின்று கொண்டிருந்தது.

வழியில் வந்து கொண்டிருந்த பாரதியார் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டே இருந்தார், பெரியவர், பையனை அடித்ததைப் பார்த்து பாரதிக்குக் கோபம். குழந்தைகளை அடிப்பது பாரதிக்குப் பிடிக்காது. குழந்தைகள் குறும்பு செய்தால், அதை வேடிக்கை பார்த்து ரசிப்பாரே தவிர கோபப்பட மாட்டார். பாரதி அந்தப் பெரியவரைப் பார்த்து “ஏன் ஒய் குழந்தையை அடிக்கிறீர்”