பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 பாரதியின் புதிய ஆத்திசூடி 0

84. மோனம் போற்று

மோனம். மோனநிலை என்பது தவத்தின் ஒரு பகுதி. ஆழ்ந்த தியானம், ஆழ்ந்த சிந்தனை, ஆழ்ந்த யோக நிலை ஆகியவைகளாகும்.

நாம் ஒரு வேலையைச் செய்வதற்கு செய்து முடிப்பதற்கு ஆழ்ந்த சிந்தித்து செய்ல்பட வேண்டும். அப்போது அந்த வேலை சீராக அமையும், சீராக முடியும்.

மோனம் என்பது கண்ணால் பார்த்தல், காதுகளால் கேட்டல், வாயால் சுவைத்தல், பேசுதல் உடம்பால் உணர்தல், மூக்கால் நுகர்தல், மனதால் சிந்தித்தல் அறிவால் அறிதல் முதலிய புலனறிவுகளையும் பகுத்தறிவையும் அனைத்தையும் ஒன்று குவித்து ஒருமுகப்படுத்தி ஒரு நிலைப்படுத்தி சிந்தித்தலாகும்.

அறிவாளிகளின் அற்புதப்படைப்புகள் புலவர்களின் அறிய கவிதைகள் இலக்கியங்கள் விஞ்ஞானிகளின் புதிய பல கண்டுபிடிப்புக்ள் முதலியவை ஆழ்ந்த சிந்தனைகளின் மூலம் கிடைக்கும் அதிசயக் கருவூலங்களாகும். இவைகளைப் போற்றி வளர்க்க வேண்டும்.

மோனம் என்றால் மெளனம் அமைதியாக தனியிடத்தில் அமர்ந்து கொண்டு ஒன்றும் செய்யாமல் பேசாமல் ஒதுங்கி விடுவதல்ல. அது ஒருவர் தனது பொறுப்புகளைத் தட்டிக் கழித்தலாகும் தனது கடமைகளிலிருந்து தப்பித்து ஓடுவதாகும் என்பதால் அதை பாரதி வெறுத்தார்.

கடமையைச் செய், தொழில் செய் தொழில் செய், எப்போதும் தொழில் செய்து கொண்டேயிரு என்று பாரதி வற்புறுத்துகிறார்.

- கடமைகளைச் செய்து முடிக்க குறிப்பிட்ட தொழில்களைச் செய்து முடிக்க அதில் முழு கவனமும் ஈடுபாடும் செலுத்த ஆழ்ந்து சிந்தித்து செயல்பட வேண்டும். அப்போது தான் அந்த செய்கையில் முழுமையான வெற்றியைக் காண முடியும்.