பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பாரதியின்-புதிய-ஆத்திசூடி-9

கிரேக்க நாட்டில் தான் ஐரோப்பாவின் பழைய தத்துவங்களும் இதிகாசங்களும் எழுந்தன. கிரேக்க தத்துவஞானிகளான பிளாட்டோ, அரிஸ்டாடில், டெமாக்ரடிஸ், சாக்ரட்டீஸ் முதலிய பெரிய தத்துவஞானிகள் தோன்றினார்கள். கிரேக்கர்கள் பல புதிய விஞ்ஞானங்களைக் கண்டு பிடித்தார்கள். அறிவியல் துறையில் சிறந்து விளங்கினார்கள். கணிதம் புவியியல் முதலிய பல துறைகளில் சிறந்து விளங்கினார்கள். நகர நாகரிகங்களைத் தோற்றுவித்து வளர்த்தார்கள். ஐனநாயகக் கருத்துக்கள் அங்கிருந்து தான் தோன்றி வளர்ந்தன. சிறந்த அரசியல் கருத்துக்களும் அங்கு தோன்றி வளர்ந்தன. இந்தியாவில் வட மேற்குப் பகுதியில் கிரேக்க மாமன்னன் படையெடுத்து வந்ததை நாம் வரலாற்றில் அறிந்துள்ளோம்.

அத்தகைய யவனர்களைப் போல் நாமும் நல்ல முயற்சிகள் செய்து பாடுபட்டு தத்துவஞானத் துறையில் அறிவியல் துறையில் அரசியல் துறையில், சிந்தனைத் துறையில், சிறந்த கதைகள், காப்பியங்கள் இலக்கியங்கள், இசைகள்முதலியவற்றில் சிறந்து விளங்க வேண்டும் என்பது பாரதி கருத்தாகும்.

பாரத நாடு, கிரேக்கர்களைப் போல் சிறந்து நாகரிகத்தையும் தத்துவஞானம், அரசியல் பொருளாதாரம், கணிதம் வானசாஸ்திரம் முதலிய அறிவியல் கருத்துக்களையும் இலக்கியங்களையும் இதிகாசங்களையும் படைத்திருக்கிறோம். ஆயினும் அவை பற்றி மற்றவர்கள் மதிக்கும் படி வணங்கும் படி நாம் கொண்டு செல்லவில்லை. அதற்கு கடும்ையான முயற்சிகள் தேவை. அத்தகைய முயற்சிகள் செய்து நமது சிறப்புகளைப் பற்றி மற்றவர்களையும் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும். ==

யவனர் என்பதற்கு நமது நிகண்டு முதலிய நூல்களில் சோனகர், கம்மாளர், சித்திரக்காரர் என்று பல்வேறு கைத்தொழில்களை கொண்டுள்ள கடும் முயற்சியுடைய மக்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.