பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1) அ.சீனிவாசன் 155

நமது நாட்டிலும் கைத் தொழில்களும் கைவினைகளும் சிறப்பாக வளர்ச்சி பெற்றிருக்கின்றன. தச்சுவேலை, கொல்லு வேலை, பொற்கொல்லர் செய்யும் ஆபரணத் தொழில் சிற்பம், உலோகத் தொழில், பாண்டத் தொழில், நெசவுத் தொழில், அதில் நூல் பட்டு கம்பளி நெய்தல், பாய் பின்னுதல் பனை ஒலையிலிருந்து பல அரிய பொருள்களைச் செய்தல் நேர்த்தியான பல ஆடைகள் உடைகள் போர்வைகள், மேலங்கிகள் தயாரித்தல் சிற்பம், சித்திரம், கட்டிட வேலைகள் இசைக்கருவிகள், செய்தல் முதலிய பல அரிய கைவினைத் தொழில்களும் சேரும்.

இத்தகைய தொழில்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதற்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டும். அதில் லாபநோக்கம் மட்டும் கூடாது. அந்த அரிய கலைப் படைப்புகளை நாம் பாதுகாத்து வளர்க்க வேண்டும்.

இத்தகைய கைத் தொழில்களுக்கு கடுமையான முயற்சி தேவைப்படுகிறது. கூர்மையான கவனம், ஆழ்ந்த அனுபவம், கடுமையான உழைப்பு கடும் முயற்சிகள் தேவைப்படுகின்றன. அதையே பாரதி யவனர் போல் முயற்சி கொள் என்று குறிப்பிடுகிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

87. யாவரையும் மதித்து வாழ்

சிறியவர்களானாலும் பெரியவர்களானாலும் மற்றவர்களை மதிக்க வேண்டும். நாம் மற்றவர்களை மதிக்கும் போது நமது மதிப்பு தானாக உயரும்.

மனிதனாகப் பிறந்த எவரும் பிறப்பிலே நல்லவர்கள் தான் அரிய சிறந்த குணங்களைக் கொண்டவர்கள் தான் சிலர் சந்தர்ப்ப சூழ்நிலை காரணங்களால் மாறுபட்டுப் போகலாம். ஆனால் தனிமனிதன் என்னும் முறையில் அவர்களுக்கு உரிய மதிப்புகள் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

அவ்வாறு பரஸ்பரம் மனிதனுக்கு மனிதன் மதிப்புக்

கொடுத்தால் நல்லுறவு நட்புறவு வளரும். சுமூகமான சூழ்நிலை எற்படும். அது தனிமனித வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக

இருக்கும்.