பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 அ.சீனிவாசன் 161

ஆகியவை எழுகின்றன. தமோ குணம் ஒங்குமிடத்து ஒளியின்மை முயற்சியின்மை தவறுதல் மயக்கம் ஆகியவை மிஞ்சி நிற்கின்றன.

ஒளி, தொழில், மயக்கம் - இவை முக்குணத்தின் இயல்பு, உயிர்கள் அனைத்திலும் வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள் இருப்பதாகப் பிரித்துக் காணும் ஞானம், பற்றுதல் உடையோனாய்ப் பயன்களை விரும்புவோன் அறம், பொருள், இன்பங்களைப் பேணுவதில் செலுத்தும் உறுதி ஆகியவை ராஜஸ் குணமாகும்.

இம்முக்குணங்களும் மனிதனிடத்தில் அவ்வப்போது மாறி மாறித் தோன்றி இடம் பெறுகின்றன. ஒரு நேரத்தில் ஒன்று முன்னணியில் நிற்கிறது. இவைகளைக் கட்டுப்பத்தி மனிதன் மேலும் உயர்ந்த நிலையை அடையலாம் என்பது இந்திய தத்துவங்களின் குறிப்பாக சாங்கியம் வேதாந்தம், கீதை ஆகிய தத்துவங்களின் வழிகாட்டுதலாகும்.

சத்வகுணம் மேலானது என்றாலும், ராஜஸம் பயில் என்று கூறுகிறார் பாரதி. காரணம் ராஜசம் நம்மை செயலில் தூண்டுகிறது. தொழிலில் ஈடுபடுத்துகிறது. ஆற்றலைத் தருகிறது. முயற்சிகளில் ஈடுபடுத்துகிறது. அறம், பொருள், இன்பங்களைப் பேணுவதில் நமது கவனத்தைத் திரும்புகிறது. இந்த குணச்சிறப்புகளில் அன்றும் (பாரதி காலத்திலும்) இன்றும் மிகுதியாகத் தேவைப்படுகிறது. அதனால் பாரதி நமது குழந்தைகளிடம் அவர்களை செயலிலும், தொழிலிலும் முயற்சிகளிலும் ஈடுபடச் செய்வதற்காக ராஜசம் பயில்’ என்று போதிக்கிறார்.

91. ரீதி தவறேல்

ரீதி என்பது ஒரு ஒழுங்கு முறை. நமது வாழ்க்கையில் நாம் சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதில் தவறக் கூடாது தவறினால் வாழ்க்கை முறை கெட்டு விடும். சிதைந்து விடும்.

மனித சமுதாய வளர்ச்சியின் அனுபவத்தில் படிப்படியாக பல சமுதாய ஒழுங்கு முறைகள நடைமுறைக்கு வந்துள்ளன.