பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 பாரதியின் புதிய ஆத்திசூடி O

நல்லவை கெட்டவை என்று பகுத்துக் கூறப்பட்டு இருக்கின்றன. உணரப்பட்டு இருக்கின்றன. செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன.

தண்ணிர், காற்று, நெருப்பு, பூமி, ஆகாயம், சூரியசந்திரர்கள், கோள்கள், சுடர்கள் முதலிய இயற்கை சக்திகள் எல்லாம் புல், பூண்டு செடி, கொடி மரங்கள் முதலிய தாவர இனிங்கள் பறவை இனங்கள் மற்றும் விலங்கினங்கள் முதலியன எல்லாம் இயல்பாகவே சில ஒழுங்கு முறைகளின் படியே செயல்படுகின்றன. மாற்றங்களும் வளர்ச்சியும் அடைகின்றன. அவற்றின் விதி முறைகளை அனுபவத்திலும் ஆய்வு செய்து அறிந்து கொண்டு அவைகளை மனிதன் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறான். உதாரணமாக ஆற்றில் ஒடும் தண்ணிர் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கிப் போவது அதன் இயல்பு. அதை வைத்து ஆற்றில் குறுக்கில் அணை கட்டி தண்ணிரை தேக்கி அதைக் கால்வாய் மூலம் நமக்குத் தேவையான இடத்திற்குக் கொண்டு செல்ல முடிகிறது.

இயற்கை மற்றும் இயற்கை சக்திகளின் செயல்பாடுகளைப் போலவே மனிதனுடைய பிறப்பும் வளர்ச்சியும் மனித சமுதாயத்தினுடைய செயல்பாடுகளும் வளர்ச்சியும் குறிப்பிட்ட ஒழுங்கு விதிகளின் படியே தான் பொதுவாக நிகழ்சின்றன என்பதை மனிதவியல் சமூகவியல் மூலம் அறிகிறோம். ஆயினும் இயற்கையின் இயக்கத்திற்கும் மனித சமுதாய செயல்பாட்டிற்கும் இடையில் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. மனிதன் தனது சிந்தனையின் மூலம் தலையிடுகிறான். அதனால் மனிதனுடைய வளர்ச்சியிலும் சமுதாய வளர்ச்சியிலும் பல பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

இதில் நாம் ரீதியுடன் அதாவது சில ஒழுங்கு முறையுடன் கொண்டு சென்றால் சேதங்களைத் தடுக்கவோ குறைக்கவோ செய்யலாம்.

மனித வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான பொருள் உற்பத்தி, மறு உற்பத்தி, வாணிபம், அரசியல், பொருளாதாரச் செயல்பாடுகள் முதலியன மனிதன் சமுதாய பூர்வமாக நடத்தும்