பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பாரதியின் புதிய ஆத்திசூடி O

சாப்பிட முடியாது. அதேபோல் தான் மற்ற சுவைகளிலும் ஒன்று கூடிவிட்டாலும் சாப்பிட முடியாமலும் திகட்டியும் உடம்புக்கு கெடுதலாகி விடும்.

வாய்க்குச் சுவையாக இருந்தால் அது இனிமை பயக்கும். அதுபோலவே இதர புலன்களுக்கும் இன்பம் தரும் சுவைகள் இருக்கின்றன. அவை புலனுணர்வுகளின் பாற்பட்டது.

சுவைகளில் முக்கியமானது உணவுச்சுவை அழகுச்சுவை. இலக்கியச்சுவை, கவிதைச் சுவை முதலியவைகளாகும். பார்ப்பதற்கும்கேட்பதற்கும் க்ண்குளிர செவி குளிர என்று கூறுகிறோம். அவ்வாறு ருசிகள் பல இவைகளை நாம் சுவைக்கும் போது ரசிக்கும் போதும் சுவைகளை ஒரு அளவுக்குள் வைத்து அனுபவிக்க வேண்டும்.

93. ரூபம் செம்மை செய்

ரூபம் என்பது உருவம், வடிவம் என்பதாகும் வடிவத்தை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். சீராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பாரதி கூறுகிறார். ரூபம் செம்மைசெய் என்றால் எதையும் அழகாக வைத்திருப்பது என்று பொருளாகும்.

அழகு என்பது உடலுறுப்புகளின் அழகாகும். முகம், கண், நெற்றி, உடலமைப்பு முதலியவற்றின் அழகு குறிப்பிடத்தக்கது. உடல் உறுப்புகள் பலவற்றை உடற்பயிற்சி மூலம் செம்மைப்படுத்தலாம்.

உடல் உறுப்புகளின் அழகுடன் மனிதனுக்கு ஆடை அழகு முக்கியமானதாகும். குறிப்பாக பெண்களுக்கு கூந்தல் முகம், கண், புருவம், நெற்றி, மூக்கு, இடை, மார்பு, முதலிய பல்வேறு உறுப்புகளைப் பற்றி எல்லாம் கவிஞர்கள் வர்ணனை செய்திருக்கிறார்கள். வாசனைப் பொருள்கள் மஞ்சள், சந்தனம், எண்ணெய் சாந்து முதலியவை மூலம் Չ)_ Լ_ Ճմ) Ճլ) அழகுப்படுத்துவதும் வழக்கமாகும். அத்துடன் அழகான ஆடைகளும் இயற்கை அழகை உயர்த்திக் கொடுக்கும்.