பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 - . பாரதியின் புதிய ஆத்திசூடி O

கடலுக்குச் செல்ல கட்டுமரங்களையும் தோணிகளையும் விசைப்படகுகளையும் கப்பல்களையும் கட்டுகிறான். கடலுக்கு சென்று மீன் பிடித்து உணவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறான்.

மனிதன் தனக்கு வேண்டிய உணவுக்கு மட்டுமின்றி துணி. வீடு. கல்வி நிலையம் கலை அரங்குகள் விளையாட்டு அரங்குகள், மருத்துவமனைகள் முதலிய பல தேவைகளுக்கும் திட்ட மிட்டு உற்பத்தி செய்து குவித்து பயன்படுத்திக் கொள்கிறான்.

திட்டக் குழுக்களை அமைத்து திட்டவரைவுகளை வகுத்துக் கொண்டு அவைகளை வழிகாட்டியாகப் பயன்படுத்திக் கொண்டு தனது வேலைகளைச் செய்து முடிக்கிறான்.

இதையே பாரதி ரேகையில் கனி கொள்' என்று கூறியுள்ளார். 95. ரோதனம் தவிர்

ரோதனம் என்றால் எந்த நேரமும் எதையாவது சொல்லி புலம்பிக் கொண்டே இருப்பதாகும். எதிலும் திருப்தியடையாமல் எதாவது ஒரு குறையை சொல்லிக் கொண்டே புலம்பிக் கொண்டே இருப்பதாகும்.

சின்னச் சின்ன தொல்லைகள் இருந்தாலும் அதைப் பெரிதுப்படுத்திக் கொண்டு மற்றவர்களுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பது ரோதனையாகும்.

ரோதனத்தைக் கொண்டிருப்பவர்கள் தாங்களும் நிம்தியாக இருக்க மாட்டார்கள், வீட்டில் உள்ள மற்றவர்களையும் நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள். அலுவலகங்களிலோ வேலை செய்யும் இடங்களிலோ இருந்தால் அவர்களும் நிம்மதியாக வேலை செய்ய மாட்டார்கள், மற்றவர்களையும் சரியாக நிம்மதியாக வேலை செய்ய விட மாட்டார்கள்.

ரோதனம் என்பது பெரும் அறுவையாகும். அறுவை மற்றவர்களுக்கு இடையூறானதாகும். எனவே நாம் எப்போதும்