பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

---

O அ.சீனிவாசன் 167

மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது. மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்க கூடாது. அத்தகைய நிலைமைகளைத் தவிர்க்க வேண்டும்.

அதையே ரோதனம் தவிர்’ என்று மிகவும் அழகாக பாரதியார் கூறியுள்ளார்.

96. ரெளத்திரம் பழகு

ர்ெளத்திரம் என்றால் மகாகோபம் ஆங்காரத்தோடு

கம்பீரமாகக் கொடுமைகளை எதிர்த்து நிற்கும்ஆ ேவ ச ம சிவதாண்டவத்த்ை ரெளத்திரம் என்று ് థ

હૈ. *"... 、 முருகன் எடுத்த கோப வடிவத்தையும் : يمتريخچژئ؟O

ரெளத்ராகாரமான வடிவம் என்று 際葛 கூறலாம். சூரபத்மனை வெல்வதற்கு திே

oty *// _ _

காளிங்க நர்த்தனம் செய்த கண்ணன் தோற்றத்தையும் ரெளத்திரத் தோடு ஒப்பிட்டுக் கூறலாம்.

ரெளத்திரம் என்றால் சாதாரணமான கோபமோ அல்லது கடுங்கோபமோ கூட அல்ல. கொடுமைகளை எதிர்த்த தீமைகளை எதிர்த்து தீயவைகளை எதிர்த்து மக்களையும் உலகையும் காப்பதற்கு நாம் எடுககும் வீரவடிவமாகும்.

பாஞ்சாலி தனக்கு ஏற்பட்ட கொடுமையை எதிர்த்து கடைசியில் சபதம் எடுக்கும் காட்சியை, கண்ணகி கையில் சிலம்புடன் பாண்டிய மன்னன் முன் நின்ற காட்சியை நாம் மனதில் கொள்ளலாம்.

கொடுமைகளை எதிர்த்து நிற்க வேண்டியது நமதுகடமை. அப்போது நமக்கு வரும் கோபத்தை நமது உள்ளத்தில் எழும் கோபத்தை சரியான திசையில் செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.