பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 அ.சீனிவாசன் 169

புறக்கணித்து விடவும் கூடாது. பெரிய பொருள் என்று மகிழ்ந்து விடவோ பேராசைப்படவே கூடாது.

சாகுபடியான தானியத்தில் ஒவ்வொரு மணியாகச் சேர்த்து தான் பெரும் குவியலாக அம்பாரமாக ஆகியது. காய்கள், கனிகள், ஒவ்வொன்றாகச் சேர்த்து தான் குவியலாகிறது. ஒவ்வொரு எழுத்தாக சொல்லாக வாக்கியமாகச் சேர்த்து தான் பெரிய அளவிலான நூலாகிறது.

ஒவ்வொரு இலையாகச் சேர்ந்து கிளைகளாகவும் மரமாகவும் பல மரங்கள் சேர்ந்து தோப்பும் ஆகிறது. ஒவ்வொரு கல்லாக செங்கலாச் சேர்ந்து வீடாகிறது.

ஒவ்வொரு விநாடியாகச் சேர்ந்து நிமிடம், பல நிமிடங்கள் சேர்ந்து மணிக்கணக்கும் நாள் வாரம் மாதம் ஆகியன சேர்ந்து ஆண்டாகவும் ஆகின்றன.

சிறுகத் தொடங்கி பெருக வாழ்வது சிறப்பாகும். அதைப் பல பெரியோர்களுடைய வாழ்க்கை அனுபவங்க ளில் கண்டிருக்கிறோம். அதை நாம் படிப்பினையாகக் கொள்ள வேண்டும்.

அணு அணுவாகச் சேர்ந்து அண்டம் பேரண்டமாகிறது என்பதை நாம் தெளிவாக மனதில் கொண்டு தான் செயல்பட வேண்டும். அதுவே லவம் பல வெள்ளமாம் என்பதன் நோக்கமாகும்.

98. லாவகம் பயிற்சி செய்

லாவகம் என்றால் ஒரு வேலையைச் செய்யும் போது ஒரு காரியத்தை நிறைவேற்றும் போது மிகவும் உஷாராக ஜாக்கிரதையாக மிக்க கவனத்துடன் கஷ்டமானதைக் கூட சுலபப்படுத்தி நெளிவு சுளிவுடன் செய்ய வேண்டும் என்பது பொருளாகும்.

முள் வேலியில் நமது துணி விழுந்து விட்டால் அத்துணியை மிகவும் ஜாக்கிரதையுடன் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால்