பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 அ.சீனிவாசன் 171

99. லீலை இவ்வுலகு

இவ்வலகு லீலைகள் நிறைந்தது என்று பாரதி கூறுகிறார். இவ்வுலகில் நடைபெறும் எண்ணற்ற நிகழ்ச்சிகளை எல்லாம் கடவுளுடன் இணைத்து எல்லாம் ஆண்டவன் லீலைகள் என்று கூறுகிறோம். பாகவதத்தில் கிருஷ்ண லீலைகள் பிரசித்தமானது. மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளது. ஆனால் பாரதி இவ்வுலகோடு இணைத்து லீலை இவ்வுலகு எனறு கூறியுள்ளார்.

இப்பேருலகில் இயற்கையில் எண்ணற்ற நிகழ்ச்சிகளைக் காண்கிறோம். காற்று அடிக்கிறது. தென்றலாக இளங்காற்றாக வீசுகிறது. பருவக்காற்றாக வீசுகிறது. புயல் காற்றாக அடிக்கிறது. பேய்க்காற்றாக அடிக்கிறது. தென்றல் காற்று நமக்கு இன்பத்தைத் தருகிறது. பருவக் காற்று மேகங்களைத் தள்ளிக் கொண்டு வந்து மழை பெய்ய உதவியாக இருக்கிறது. புயல்காற்று பேய்க்காற்று சூறாவளிக்காற்று முதலியவை சேதங்களை உண்டாக்குகின்றன. இவை யெல்லாம் காற்றின் லீலைகள் அதாவது அதன் செயல்பாடுகளாகும்.

தண்ணிர் கடலில் நிறைந்திருக்கிறது. அது மேகங்களாய் மாறி மழையாய் பெய்கிறது. மழை சாரல் மழ்ை, தூரல் மழை GLDITITITбът மழை, சாதாரண மழை, துணி நனைய மழை, தண்ணிர் புரள மழை, நல்ல ஈரத்திற்கான மழை, பலமான மழை, பெருமழை, பேய் மழை, பெய்கிறது. மழையினால் நமக்கு நல்ல பலன் கிடைக்கிறது. பல நன்மைகளும் உண்டாகின்றன.

ஆறுகளில் தண்ணிர் வருகிறது. ஆற்றுநீரை அணைகளில் எரி குளங்களில் தேக்கி வைக்கிறோம். அவை பாசனத்திற்கு குடிதண்ணிருக்கு, நிலத்தடி நீரைப் பாதுகாக்க ஆகாயத்தின் வெப்பத்தைத் தணித்து சமநிலை உண்டாக்க உதவுகிறது.

தண்ணிர் நமக்கு குடிக்கவும் உணவு சமைக்கவும் குளிக்கவும், சூட்டைத் தணிக்கவும் இன்னும் பல வழிகளிலும் பயன்படுகிறது. தண்ணீர் பெருவெள்ளமாக வந்தால் கடல் பொங்கினால் சேதங்கள் விளைகின்றன. இவ்வாறு நீரின் லீலைகள் பலவிதமாகும்.