பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 _பாரதியின்-புதிய ஆத்திசூடி O

நெருப்பைக் கண்டுபிடித்த மனிதன் அதை வைத்து குளிர்காயவும் வைப் பொருள்களை வேகவைக்கவும் கற்றுக் கொண்டான். அதன் பின்னர் மனிதன் உலோகக் கனிகளை உருக்கி லோகங்களைப் பயன்பட்டிற்குக் கொண்டு வந்தான். இந்தக் கண்டுபிடிப்புகள் ஆதிமனிதனின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்களை உண்டாக்கி விட்டது. புதிய நாகரிகத்திற்கு

வழிவகுத்தது.

வெண்கலம், செப்பு, தங்கம், வெள்ளி, இரும்பு, பித்தளை முதலிய பலவகை உலோகக் கனிவகைகளையும் கண்டுபிடித்து அவைகளை உருக்கி பல வகையான கருவிகளையும் ஆயுதங்களையும் பாத்திரங்களையும் சிலைகளையும் பொறிகளையும் செய்து அவைகளைப் பயன்படுத்திக் கொண்டான்.

ஆதி மனிதன் தொடக்கத்தில் இதர உயிரினங்களைப் போல விலங்கினங்கள், பறவையினங்களைப் போலவே உணவைச் சேகரித்து உண்டான். இயற்கையில் கிடைத்த உணவைச் சேகரித்து உண்டான். இயற்கையில் கிடைத்த உணவைச் சேகரித்து உண்பதிலிருந்து படிப்படியாக உயர்ந்து மனிதன் உணவை உற்பத்தி செய்யக் கற்றுக் கொண்டான். இந்த வளர்ச்சி தான் மனித சமுதாய வளர்ச்சியில் ஏற்பட்ட மிகப் பெரிய அடிப்படையான மாற்றமாகும் என்பதை அறிவோம்.

உணவையும் இதர தேவைப் பொருள்களையும் உற்பத்தி செய்து கொள்வதற்கு மனிதன் தனது உழைப்பைச் செலுத்தினான் உழைப்பிற்குக் கருவிகளைப் பயன்படுத்தினான். முதலில் கல்லும் கம்பும் பின்னர் உலோகங்களால் ஆன கருவிகளைச் செய்து அவைகளை தனது உழைப்பிற்குப் பயன்படுத்திக் கொண்டான்.

இந்த உழைப்பு தான் மனிதனை மனிதனாக்கியது. மிருக சாம்ராஜ்யத்திலிருந்து மனிதனை வேறுபடுத்தி உயர்த்தியது. மனிதன் தனது உற்பத்திக் கருவிகளைச் செய்து கொள்வதற்கும் அவைகளை அபிவிருத்தி செய்து கொள்வதற்கும் உலோகங்கள் மிகப் பெரிய அளவில் பயன்பட்டது. இப்போதும் பயன்படுகிறது.