பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 அ.சீனிவாசன் 175

உலோகங்களைப் பற்றிய அறிவு அறிவியல் தனிப்பிரிவாக தனிக் கலையாக உலோக வியல் என்று பெயரில்

விரிவுப்பட்டிருக்கிறது.

உலோகங்க ளில் இருந்து இன்று எண்ணற்ற பொருள்களையும் கருவிகளையும் செய்கிறோம். எந்திரங்கள் எந்திரக் கருவிகள், கைக்கருவிகள். மிக நுட்பமான அறுவை சிகிச்சைக் கருவிகள் கடிகாரங்கள், மீட்டர்கள், பெரிய எந்திரங்கள் கொதிகலன்கள் ஊர்திகள், பெட்டிகள், கப்பல்கள், விமானங்கள் வீட்டுப் பொருள்கள் முதலிய பலவற்றிற்கும் உலோகங்களைப் பயன்படுத்துகிறோம்.

வெட்டுக்கனிகளை உருக்கி உலோகங்களைப் பிரித்து எடுத்தல் அதைப் பாளங்கள் தகடுகள், கம்பிகள் செய்தல், அதை உருக்கிக் கலவைகளைச் செய்தல் உலோகப் பொருள்களைப் பற்றவைத்து இணைத்தல் உலோகங்கள் உலோகக் கலவைகள் ஆகியவற்றின் தரம் உறுதி பயன்பாடு முதலியவைகளைக் கண்டறிதல் அதன் மூலம் பல பொருள்களைச் செய்தல் உலோகங்களின் பலவகைப் பயன்பாடுதலகளைக் கண்டறிதல் முதலியவைகளை உலோக நூல்கள் விவரிக்கின்றன.

உலோகங்களைப் பற்றி பாரதி தனது பல பாடல்களிலும் குறிப்பிடுகிறார். 'மண்ணினுட் கனிகளிலும்' என்றும் கல்லை வயிர பணியாக்கல் - செம்பைக் கட்டித் தங்கமெனச் செய்தல்' என்று நிலத்தின் கீழ் பல்லு லோகங்களாயினை' என்று, 'வெட்டுக்கனிகள் செய்து தங்க முதலான வேறுபல பொருளும் கடைந்தெடுப்போம்” என்று ஆயுயங்கள் ஆலைகள், குடைகள், ஊழுபடைகள் இரும்பாணிகள் வண்டிகள், கப்பல்கள் முதலியன செய்வோம் என்று, கொல்லர் உலை வளர்ப்போம்” எனவும் 'இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவிரே யந்திரங்கள் வகுத்திடுவிரே' என்றெல்லாம் பாரதி பாடுகிறார்.

உலோக நூல் வளர்ச்சி ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும் எனவே நமது நாட்டு இளைஞர்கள் உலோக நூல்களை நன்கு கற்றுத் தேர்ச்சி பெற வேண்டும்.