பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O அ.சீனிவாசன் 177

அறநெறியில் நமது வாழ்க்கை அமைய வேண்டும் என்பது தான் இல்லறம், துறவறம் ஆகிய இரு நெறிகளின் நோக்கமாகும்.

இரண்டாவதாக பொருள் என்பது நாட்டை வளமாக்க ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையையும் வளமாக்க பொருள் தேடுதல் பொருள் குவித்தல், அரசியல் அமைச்சு, நாடு முதலியன பற்றிய நெறிமுறைகளைச் சீரமைத்து நிர்வகித்தலாகும். இவை அனைத்தும் உலகியல் மனித வாழ்க்கை பற்றியதாகும்.

மூன்றாவதாக இன்பம் (காமம்) என்பது ஆண் பெண் நல்லுறவும் கூட்டு வாழ்க்கையும் குடும்ப வாழ்க்கையுமாகும். உலகில் வாழ்க்கை இன்பங்கள் அனைத்தும் இந்த கருத்தில் இணையும். நான்காவதாக வீடு என்பது மோட்சம் என்பது எங்கே உள்ளது? இந்த உலக வாழ்க்கையை முழுமையான இன்பங்கள் நிறைந்த வாழ்க்கையாக மனிதன் முழு விடுதலை பெற்றவனாக ஆக்குதலாகும்.

எனவே மனிதனுடைய வாழ்க்கை இன்பங்களை லெளகீகம் என்றும் அறிவுத் துறை வளர்ச்சியை மனிதனின் உயர்ந்த பக்குவநிலையை ஆன்மீகம் என்றும் கொள்ள வேண்டும்.

ஒரு வீட்டின் அஸ்திவாரம் முக்கியமா, சுவர்கள் முக்கியமா, கூரை முக்கியமா, சுவர்கள் மீது பூசப்படும் வர்ணங்கள் முக்கியமா கதவுகளும் ஜன்னல்களும் பூட்டும் முக்கியமா என்று பேசிக் கொண்டிருப்பதில் பலன் இல்லை.

மனிதன் பேசுவதற்கும் எழுதுவதற்கும் படிப்பதற்கும் சிந்திப்பதற்கும் முன்பாக அவன் உயிர்வாழ வேண்டும். அதற்காக அவன் சாப்பிட வேண்டும் உடை உடுத்த வேண்டும் ஒரு வீட்டில் ஒரு இடத்தில் தங்க வேண்டும். எனவே மனித வாழ்க்கையில் உலகியல் வாழ்க்கை அடிப்படையாக அமைகிறது.

மேலும் உணவு, உடை, வீடு முதலிய அடிப்படைத் தேவைகளுடன் கல்வி, விளையாட்டுப் பயிற்சி பொழுது போக்கு வசதிகளும் இப்போது அத்தியாவசியத் தேவைகளாகி விட்டன,