பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9-பாதியின்-புதிய-ஆத்திசூடி אזו

ஒன்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான அதாவது அறிவு சிந்தனை வளர்க்சிக்கான தேவைகரும் கூட. லெளகீகத் தேவைகளாகி

ീl'l. r1,

யாவே டி லகியல் கடமைகளை நாம் ஆற்ற வேண்டும். அதில் நமது வீட்டிற்கு நாட்டிற்கு நாட்டு மக்களுக்குத் தேவையான பொருள்களை உண்டாக்குவதிலும் அவைகளைச் சீராக விநியோகம் செய்வதிலும் நாம் முக்கியப் பங்கை ஆற்ற வேண்டும்.

நமது வீட்டின் லெளகீகக் காரியங்களில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். வீட்டைப் பராமரித்தல் நமது முக்கியமான பணிகளில் ஒன்றாகும்.

வீட்டிற்கு வேண்டிய பொருள்களைச் சேகரித்தல், இல்லறத்தை செவ்வனே நடத்துவது குழந்தைகளைப் பராமரிப்பது அவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுப்பது வீட்டில் உள்ள பெரியவர்களை மூத்தவர்களைப் பராமரிப்பது, தாய் தந்தையர் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் குழந்தைகள் தங்கள் தாய் தந்தையருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் அனைவரும் சேர்ந்து சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் ஆற்ற வேண்டிய கடமைகள் ஆகியவற்றை செவ்வனே செய்ய வேண்டும்.

வேலை செய்தல், பொருள் சேர்த்தல் படித்தல் குழந்தைகளுக்குக் கல்வி கொடுக்க ஏற்பாடு செய்தல், குழந்தைகளுக்கு உரிய வயதில் திருமணம் முடித்தல் அவர்களுக்கு நல்ல குடும்பங்கள் அமைத்துக் கொள்ள உதவுதல் வேண்டியவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்தல், நாட்டில், ஊரில் தொழில்களை வளர்த்தல் வாணிபத்தைப் பெருக்குதல், கல்வி நிலையங்களை அமைத்து கல்வியைப் பெருக்க உதவி செய்தல்.

நாம் குடியிருக்கும் கிராமங்கள், நகரங்கள், தெருக்கள், குடியிருப்புப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு குடிதண்ணிர், கல்வி சுகாதாரம் முதலியன கிடைக்கப் பாடுபடுதல், முதலியனவற்றில் நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்ற வேண்டும்.