பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O அ.சீனிவாசன் 179

இவைகளை எல்லாம் லெளகீகம் என்று கூறுகிறோம். உலகியல் பணிகள் என்று கூறுகிறோம். இதையே லெளகீகம்

ஆற்று. என்று பாரதி கூறுகிறார். 103. வருவதை மகிழ்ந்து உண்

உணவு உட்கொள்ளும் போது மகிழ்ச்சியோடு உண்ண வேண்டும் என்பது பாரதியின் வாக்கு. அவசர அவசரமாக அள்ளிப்போட்டு உண்ணக் கூடாது. கவலை கொண்டும் அழுது கொண்டும் உண்ணக் கூடாது.

அத்துடன் வருவதை மகிழ்ந்து உண் என்றும் பாரதி கூறுகிறார். எல்லா நேரங்களிலும் நாம் விரும்பும் உணவுப் பொருள்கள் எல்லாம் கிடைப்பதில்லை. அதனால் வருத்தம் கொள்ள வேண்டாம்.

கிடைக்கக்கூடிய பொருள்களை வைத்து நல்ல உணவாகத் தயாரித்து சாப்பிடலாம். நமது வீட்டில் தாய் சமையல் செய்து உணவு படைக்கிறாள்.

அதில் நாம் அது இல்லை, இது இல்லை என்று கூறி சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் இருக்கக்கூடாது.

வருவதை வைத்து மகிழ்ச்சியோடு மற்றவர்களோடு சேர்ந்து அமர்ந்து உணவு உண்ண வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவது தனி மகிழ்ச்சியைத் தரும். 104. வான நூல் பயிற்சி கொள்

சரித்திரம் தேர்ச்சி கொள் என்றும் நீதி நூல் பயில் என்றும் போர்த் தொழில் பழகு என்றும ரஸத்திலே தேர்ச்சி கொள் என்றும் ராஜஸம் பயில் என்றும் லாவகம் பயிற்சி செய் என்று உலோக நூல் கற்றுணர் என்றும் கூறும் பாரதி இப்போது வான நூல் பயிற்சி கொள் என்று கூறுகிறார்.