பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O அ.சீனிவாசன் 181

ஆகியவை பற்றிய அறிவும் ஆராய்ச்சியும் நமக்கு மிகவும் பயனுள்ளதாகும்.

சூரிய ஒளி சந்திர ஒளி பருவங்கள், பருவ மாற்றங்கள் வானமண்டலத்தின் அசைவுகள் இயக்கங்கள், மழை காற்று ஆகியவற்றின் அசைவுகள் இயக்கங்கள் பற்றிய ஞானம் நமக்கு மிகவும் அவசியமானதாகும். --

சாகுபடி, கப்பல் ஒட்டுதல், கடலுக்குச் சென்று மீன்பிடித்தல் முதலிய தொழில் செய்தல், விமானம் ஒட்டுதல் முதலிய முக்கிய தொழில்களுக்கு வானநூல் பயிற்சியும் ஆராய்ச்சியும் மிகவும் அவசியமானதாகும். எனவே வானநூல் பயிற்சி கொள்ள பாரதி நமக்கு வழிகாட்டுகிறார்.

105. விதையினைத் தெரிந்திடுக

விளையும் பயிர் முளையிலே என்று கூறுவார்கள் விதை சீராக நல்ல விதையாக இருந்தால் தான் முளை நன்றாக அமையும். நல்ல விதைகளைத் தெரிந்தெடுக்க வேண்டும். நல்ல விதையினைத் தெரிந்து இட வேண்டும்.

நாம் விளைவிக்கும் பொருள்களில் நல்ல தரமானவைகளை விதைக்காகத் தனியாக எடுத்து அதைப் பக்குவப்படுத்தி வைத்துக் கொள்வது நமது கிராமங்களில் பரம்பரைப் பழக்கமாகும்.

நெல், சோளம், கம்பு, ராகி, முதலிய தானியங்கள் விளையும் போது அதில் நன்றாகத் தூற்றி மணிகளைப் பிரித்து அதை நன்கு உலர வைத்து வெயிலில் காய வைத்து விதைக்காக என்று தனியாகப் பக்குவப்படுத்தி வைப்பது என்பது பழக்கமாகும்.

வேர்க்கடலை உளுந்து, மொச்சை, துவரை, பச்சைப்பயறு முதலிய பயறு வகைகளிலும் அவரை, புடல், வெண்டை பீர்க்கை பாவை பூசணி முதலிய காய்கறிகளிலும் விதைக் கென்று தனியாக எடுத்து அதைப் பக்குவப்படுத்தி வைத்துக் கொள்வதும் பழக்கமாகும்.