பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TB2 பாரதியின் புதிய ஆத்திசூடி 0

இப்போது விதைப்பண்ணைகள் ஆராய்ச்சிப் பண்ணைகள் மூலம் பலவகை பொருக்கு விதைகள் வீரிய வித்துக்கள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப் படுகின்றன. இவைகளை நாம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். ஊர்தோறும் விதைக்கடைகள் மூலம்புதிய பல ரகங்களின் விதைகள் விநியோகிக்கப்படுகின்றன. அரசு டிப்போக்கள் மூலமும் விதைகள் விநியோகம் செய்யப்படுகின்றன.

நமது நாட்டில் இப்போது விவசாயப் பல்கலைக்கழகங்கள், விவசாயக் கல்லூரிகள், ஆராய்ச்சி பண்ணைகள் செயல்படுகின்றன. அவற்றின் மூலம் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று ஏராளமான பல புதிய ரக விதைகளும் கண்டுபிடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் கோயமுத்துரில் விவசாயப் பல்கலைக்கழகம் பல ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறது. மேலும் பல மாவட்டங்களிலும் நெல், சோளம், கம்பு, ராகி, பருத்தி, வேர்க் கடலை, கரும்பு, தென்னை, LD PT, வாழை எண்ணெய்வித்துக்கள் பயறு வகைகள், காய்கறிகள், பூக்கள் முதலிய பல பயிர்கள் பற்றி ஆராய்ச்சிகள் செய்து புதிய ரகங்களும் விதைகளும் வந்திருக்கின்றன.

அண்மைக்காலத்தில் உயிரியல் தொழில் நுட்ப முறையிலும் பல ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசுத் துறையில் மட்டுமல்லாமல் தனியார் துறையிலும் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று விதை உற்பத்தி செய்யப்படுகிறது. அத்துடன் மண் ஆராய்ச்சியும் செய்யப்படுகிறது. மண் தரம் பருவம் முதலியவைகளுக்கேற்ப நல்ல விதைகளைத் தேர்ந்தெடுத்து நாம் இட வேண்டும்.

106. வீரியம் பெருக்க

வீரியம் என்பது வலிமை, உறுதி, திடம் என்பவைகளாகும் வீரியத்திலிருந்து வீரம், தீரம், வீராப்பு முதலிய சொற்கள் வருகின்றன.