பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O அ.சீனிவாசன் 185

மக்களுடைய பங்கு இணைந்தால் தான் திட்டங்கள் சரிவர நிறைவேறும். சட்டங்கள் சீராக அமுலாகும். அந்தத் திசையில் மக்களும் நாளுக்கு நாள் அதிகமாக விழிப்புணர்வு பெற்று பக்குவமடைந்து வருகிறார்கள்.

o மக்களிடையில் கருத்துப் பரிமாற்றமும் பொது விவாதங்களும் கலந்துரையாடல்களும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. வானொலிகளிலும் தொலைக்கட்சிகளிலும் அதிகமான அளவில் இளம் வயதினரும் பொது மக்களும் அதிகமாகப் பங்கு கொள்கிறார்கள். இதற்குக் கருத்துக் தெளிவும் வாக்குத் தெளிவும் மிகவும் அவசியமாகும்.

மக்களாட்சி முறையில் அரசியல் கட்சிகள் பொது மக்களின் அமைப்புகள் சங்கங்கள் முதலியவற்றின் பங்கும் பணிகளும் அதிகரிக்கின்றன. பஞ்சாயத்து அமைப்புகளிலிருந்து பாராளுமன்றம் வரையிலும் அடிக்கடி தேர்தல்களும் நடைபெறுகின்றன.

மக்களிடையில் கருத்துப் பரிமாற்றங்கள் அதிகரிக்கின்றன. மக்களிடம் நேரில் சந்தித்து உரையாடுவது அரசியல் கட்சிகளுக்கும் பொது அமைப்புகளின் உறுப்பினர்களுக்கும் ஒரு முக்கியமான வழி முறையாகும். தனிப் பேச்சாளர்களும் பயிற்சி பெற வேண்டும். அதற்கான தனிப்பயிற்சியும் கொடுக்கப்பட வேண்டும். பேச்சுக்கலையை நாம் வளர்க்க வேண்டும். எனவே பாரதியின் வெடிப்புறப் பெசு’’ என்னும் வாசகம் இப்போது அதிகமான அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. 108. வேதம் புதுமை செய்

பாரதியின் புதிய ஆத்திசூடி வாக்குகளில் வேதம் புதுமை செய்' என்பது மிக முக்கியமான வாக்குகளில் ஒன்றாகும். இது அவருடைய தத்துவ ஞானத்தின் உலகக் கண்ணோட்டத்தின் அடி ஆழத்தையும் திசை வழியையும் காட்டுகிறது.

வேதங்களைப் பற்றி பாரதி தனது பாடல்களிலும்

குறிப்பிடுகிறார். அத்துடன் அவருடைய பகவத்கீதை மொழி பெயர்ப்புக்கு எழுதியுள்ள முன்னுரையிலும் வேதங்களைப் பற்றிய