பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O அ.சீனிவாசன் 189

கருத்துக்களையும் சேர்க்க வேண்டும். மனு நீதியிலிருந்து பல நீதிநூல்கள் தோன்றி இன்று நாடு விடுதலை பெற்று அரசியல் சட்டம் நமது வாழ்க்கையின் பகுதியாக வளர்ந்து வந்திருக்கிறது. நமது அரசியல் சட்டமும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் பல திருத்தங்களைக் கண்டிருக்கிறது. மேலும் பல திருத்தங்கள் வரலாம். அரசியல் சாசனம் முழுவதையுமே கூட திருத்தி அமைக்க வேண்டியதும், செழுமைப்படுத்த வேண்யதும் ஏற்படலாம்.

எனவே 'வேதம் புதுமை செய்' என்னும் பாரதியின் கருத்தை வழிகாட்டியாகக் கொண்டு அறிவுச் செல்வத்தின் புதிய சிகரங்களுக்கு எட்ட வேண்டும்.

109. வையத்தலைமை கொள்

உலகத்தின் தலைமைக்கு பாரதம் வரவேண்டும் என்பது பாரதியின் விருப்பமாகும்.

'உன்னைக் கோடிமுறை தொழுதேன் -இனி

வையத் தலைமை எனக்கருள்வாய்”

என்றும்

'என்றன் பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும்'

என்றும் பாரதி பாடுகிறார்.

அடிமை வாழ்வகன்று, இந்நாட்டார் விடுதலை அடைந்து செல்வம், குடிமையில் உயர்வு, கல்வி, ஞானம் கூடியோங்கி படிமிசை தலைமை எய்தும்படி பாரதி நம்மை வேண்டுகிறார். பாரில் உள்ள பல நாட்டினருக்கும் பாரத நாடு புது நெறி காட்ட வேண்டும் என்று பாரதி விரும்பினார்.

உலகில் பல நாடுகளும் பல துறைகளிலும் முன்னணிக்கு வந்துள்ளன. ஒரு காலத்தில் பாரத நாடு செல்வத்திலும் செழிப்பிலும் சிறந்து விளங்கியது. அதனால் பல நாட்டாரும் இந்நாட்டின் மீது படையெடுத்தார்கள். காட்டுமிராண்டித்தனமாக பல கொள்ளைகளை நடத்தினார்கள். அவர்களில் பலர் இங்கேயே தங்கி இந்த நாட்டு மக்களுடன் சேர்ந்து விட்டார்கள்.