பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 _பாதியின் புதிய ஆத்திசூடி O

கடைசியாக ஆங்கிலேயர்கள், தங்கள் ஆயுத பலத்தாலும் அரசியல் சூழ்ச்சியாலும் இந்த நாட்டை ஆக்கிரமித்து பெருங் கொள்ளையடித்தார்கள். அதனால் நமது நாட்டு மக்கள் ஏழ்மையிலும் வறுமையிலும் அறியாமையிலும் கல்லாமையிலும் தள்ளப்பட்டார்கள்.

ஆயினும் அத்தனை துன்ப துயரங்களையும் தாங்கி நின்று சக்தி மிக்க ஆன்மீக பலத்துடன் நின்று நாடு விடுதலை அடைந்தது. விடுதலைக்குப் பின்னர் பாரத நாடு பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டுடிக்கிறது. அம் முன்னேற்றத்தை முழுமைப்படுத்த வேண்டும். மேலும் முன் எடுத்துச் செல்ல வேண்டும்.

மக்கள் தொகையில் பாரதம் உலகில் இரண்டாவது பெரிய நாடாக இருக்கிறது. மனித வளத்தில் அறிவுச் செல்வத்தில் மனித ஆற்றலில் பாரதம் இன்று முதலிடம் பெற்றிருக்கிறது. நமது அறிவுச் செல்வர்கள் டாக்டர்கள், இன்ஜினியர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பல நிபுணர்களும் இன்று பல நாடுகளுக்கும் சென்று தங்கள் திறனை நிலை நாட்டியுள்ளார்கள்.

பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்று பாரதத்தின் தனிச்சிறப்புகளை எல்லாம் குறிப்பிட்டு பாரதி பாடியுள்ளார். பாரதத்தின் அத்தனை சிறப்புகளும் இணைந்தால் உலகத்தலைமைக்கு வருவதில் சந்தேகமில்லை.

உலகில் வறுமையும், ஏழ்மையும் அறியாமையும் கல்லாமையும், ஏற்ற தாழ்வுகளும் நீங்கி படைச் செருக்குகள் ஒழிந்து உலகில் முழுமையான அமைதி ஏற்பட்டு அறம் நிலவும் படி பாரில் உள்ள பல நாட்டினருக்கும் பாரத நாடு புது நெறியைக் கொண்டு வரும் என்று பாரதி கனவு கண்டார்.

பாரதியின் கனவை நிறைவேற்ற நாம் முற்பட வேண்டும்.

110.வெளவுதல் நீக்கு

வெளவுதல் என்றால் கைப்பற்றுதல், கவ்வுதல் அபகரித்தல் என்று பொருள்படுகிறது. நமக்கு சம்பந்தமில்லாதவற்றை