பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Q அ.சீனிவாசன் * 11

அடிடிைப்பட்டுள்ள நாடு, அதே போல் வறுமைப்பட்டுள்ள நாடு இளைத்த நாடாகும். மக்கள் உடல் நலமும், உடல் வலுவும் அறிவு வளர்ச்சியும் இல்லாமல் வறுமைப்பட்டு நலிந்துபோய் நின்றால் அது இகழ்ச்சியாகும்.

இகழ்ச்சியைப் பற்றி தொல்லை இகழ்ச்சிகள்’ என்று பாரதி குறிப்பிடுகிறார். அந்தத் தொல்லை இகழ்ச்சிகளில், உடலிலும் உள்ளத்திலும், அறிவிலும் இளைத்தல், ஒன்றாகும். இளைத்த விதை முளைக்காது. இளைத்த செடி வளராது. காய்க்காது. இளைத்த கன்று உருப்படாது. இளைத்த பசு பால் கொடுக்காது. இாைத்த மாடு வேலைக்கு உதவாது. இளைத்த குழந்தை, இளைத்த மனிதன், இளைத்த குடும்பம் இளைத்த சமுதாயம், இளைத்த நாடு வலிவு குன்றி, செல்வம் குன்றி நகைப்பிற்கும் இகழ்ச்சிக்கும் இடமாகி அடிமைப்பட்டு விடும். வறுமைப்பட்டு விடும், வளர்ச்சி குன்றி விடும். --

இளைப்பது என்றால் வலிமையற்ற தோள்கள், ஒடுங்கிய மாlu, பொலிவில்லாத முகம், பொறியிழந்த விழிகள், ஒலி குறைந்த குரல், ஒளியிழந்த மேனி, கிலி பிடித்த நெஞ்சு என்று பதி நினைவுபடுத்துகிறார். இந்தக் கீழ்நிலை தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் நீங்க வேண்டும் உடலிலும் _ள்ளத்திலும் அறிவிலும் ஆரோக்கியம் வளர வேண்டு. இதைக் குழந்தைகள் உள்ளத்தில் பதிய வைக்க வேண்டும்.

4. ஈகைக்திறன்

ாகை என்பதற்கு வேண்டுவோருக்குக் கொடுப்பது என்று பொருள் கூறப்படுகிறது. வறியார்க் கொன்றிவதே ஈகை' என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். ஈகை என்பது இல்லாதவர்களுக்கு கொடுத்தல், தன்னிடம் உள்ளவற்றை மற்றவர்களுக்கு கொடுத்தல் என்று பொருளாகும். மற்றவர்களுக்கு வேண்டுவதைக் கொடுப்பதற்கு ஈகைத்திறன் உள்ள உள்ளம் நமக்கு இருக்க வேண்டும். இல்லாதவர்களுக்குக் கொடுத்தல் என்பது பொருள் இல்லாதவர்க்கு உதவி செய்தல் என்பது மட்டுமல்ல கல்வி இல்லாதவர்களுக்கு கல்வி கொடுப்பதும் ஈகையின் பகுதிதான்.