பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பாரதியின்-புதிய-ஆத்திசூடி-9

ஈதல் என்பது கொடுத்தல், ஈகை என்பது கொடுக்கும் உள்ளம். அத்தகைய ஈதல் உள்ளம் உறுதியாக இருக்க வேண்டும் என்று பாரதி கூறுகிறார்.

ஈகை என்பது மனிதனுடைய நற்பண்புகளில் ஒன்று. வள்ளுவர் குடிமைப்பகுதியில்

'நகை, ஈகை, இன்சொல், இகழாமை நான்கும் வகையென்ப வாய்மைக் குடிக்கு”

என்று கூறுகிறார். நாடடின் நல்ல பிரஜையாக இருப்பதற்கு ஈகைத்திறன் ஒரு முக்கிய பண்பாகும்.

அதேபோல் இறைமாட்சி என்று அரசியல் அதிகாரத்தில்,

'அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தற்கியல்பு”

என்று கூறுகிறார். அதாவது அஞ்சாமை, ஈகை, அறிவுடமை, ஊக்கமுடைமை ஆகிய நற்பண்புகளும் குணங்களும் அரசனிடம் அதாவது ஆட்சிப் பொறுப்பில் அரசியல் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும், அதையே பாரதியும் ஈகைத் திறன் என்று குறிப்பிடுகிறார்.

மகாபாரதக் கதையில் கர்ணனுடைய காதாபாத்திரம் ஈகைத்திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். போர்க்களத்தில் சாகும் தருவாயில் இருந்த போதும் கூட தனது கவச குண்டலங்களையும் உயிர் போகும் தருவாயில் கூட வேதியன் வேடத்தில் வந்த கண்ணனுக்கு தனது புண்ணியம் அனைத்தையும் ஈந்தான் என்றும், அதைக் கண்டு கண்ணனே கர்ணனைக் கட்டித்தழுவி தனது தெய்வ வடிவம் காட்டி வேண்டிய வரம் கேட்கும்படி கூற கர்ணன், ஏழே மு பிறப்பு எடுப்பினும் இல்லையென்று கேட்போருக்கு இல்லையென்று கூறாத இதயம் வேண்டும் என்று கேட்க கண்ணன் மகிழ்ந்து “எத்தனை பிறப்பு எடுத்தாலும் ஈகையும் பொருளும் பெற்று இறுதியில் முக்தியும் பெறுவாயாக! என வாழ்த்தி வரம் கொடுத்ததாக பாரதக் கதை கூறுகிறது.