பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பாரதியின் புதிய ஆத்திசூடி O

அனுமன் வாயு புத் தி ரன் பலத் திற்கு வாயு ைவ எடுத்துக்காட்டாகக் கூறுவதுண்டு. கதையில் அனுமனுடைய உடலுறுதியைப் பற்றிக் கூறும் போது கடலைத் தாண்டினான் சஞ்சீவி மலையைப் பெயர்த்து அதைத் துக்கிக் கொண்டு வந்தான். இலங்கையை எரித்தான் என்றெல்லாம் கூறப்படுகிறது.

இராவணன் உடல் பலமும் உறுதியும் கொண்டவன் என்று இராமாயணக்கதை கூறுகிறது. இராவணன் இமயமலையில் உள்ள கைலாயத்தையே கட்டை விரலால் அசைத்தவன் என்றும், ஆயிரம் யானைகளை எதிர்த்துப் போரிடும் வல்லமை மிக்கவன் என்றெல்லாம் உடல் பலத்திற்கு உதாரணம் கூறப்படுகிறது.

பாரக்கதையில் பீமன் உடல் பலமும் உறுதியும் மிக்கவன், பீமனும் அனுமனைப் போல வாயு புத்திரன். பீமனும் வாயுவைப் போல் பலமும் உறுதியும் கொண்டவன். பீமன் நூற்றுவரையும் கொன்றவன்.

இவைகள் எல்லாம் கதாபாத்திரங்கள் என்ற முறையில் கதையில் விளக்கத்தில் மிகைபடக் கூறப்பட்டிருந்தாலும் அவை உடல் பலத்திற்கும் உறுதிக்கும் உதாரணங்களாகும்.

உடலினை உறுதி செய்ய உடற்பயிற்சி அவசியமாகும் என்பதை நாம் அறிவோம். நமது குழந்தைகளும் இளம் ஆண்களும், பெண்களும் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஊர்தோறும், வீதி தோறும், பள்ளி தோறும், கல்விநிலையங்கள், தோழில் நிலையங்கங்களிலும் உடற்பயிற்சி நிலையங்களும் விளையாட்டுப் பிரிவுகளும் அமைய வேண்டும். நமது இளைஞர்கள் பல விளையாட்டுகளிலும் பயிற்சியும் தேர்ச்சியும் பெற வேண்டும்.

உலக விளையாட்டுப் போட்டிகளிலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பாரத நாடு இன்னும் பலவீனமாகவே இருக்கிறது. அந்நிய ஆட்சிகால அவலநிலை தொடர்கிறது. அந்த நிலை மாற வேண்டும்.