பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பாரதியின் புதிய ஆத்திசூடி 0

மனம் ஒரு குரங்கு என்பார்கள். குரங்கு ஒரு நிலையில் நிற்காது. வெள்ளாடு ஒரு இடத்தில் நின்று மேயாது. துஷ்ட மிருகங்கள் கண்டதை அடித்துக் கொன்று தின்னும். மனிதன் அப்படி இருக்கக்கூடாது. ஒரு ஒழுங்கு கட்டுப்பாட்டிற்குள் செயல்பட வேண்டும். உரிய கட்டுப்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

அதிகம் பேசினால் வாய் அடக்கிப் பேசு என்று கூறுகிறார்கள். ஒட்டை வாயன் என்கிறார்கள். இவன் வளவளவென்று பேசுகிறான் என்று கூறுகிறார்கள். இவன் வாயில் விழுந்தால் கேடு என்கிறார்கள். வாய் அடக்கி அளவோடு பேசினால், நல்லதைப் பேசினால், உண்மை பேசினால் அதற்கு பாராட்டு கிடைக்கிறது, ஒருவன் சொன்ன சொல்லைக் காப்பற்றினால் அதற்குப் பாராட்டு கிடைக்கிறது. இவன் வாய் சுத் தம் உள்ள வன் என்று உண்மை பேசுபவனைப் பாராட்டுகிறார்கள். வாய்ஜாலம், வாய்ச்சவடால் இல்லாதவன் என்று கூறுகிறார்கள். நாகாக்க என்று வள்ளுவர் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

வாய் பேசுவதற்காக மட்டுமில்லை. வாய் மூலம் உணவு சாப்பிடுகிறோம். இதர ஆகாரங்களைத் தண் ணிரை உட்கொள்கிறோம். கண்டதை சாப்பிட்டால் இவன் வாய் கட்டவில்லை என்று கூறுகிறார்கள். ருசியாக இருக்கிறது. அதிகம் பசிக்கிறது என்று எதையும் அளவுக்கு மீறி சாப்பிட்டு விட்டால் அது அஜீரணத்திலும் இதர வியாதிகளிலும் கொண்டு போய் விடுகிறது. உடல் நலமில்லாமல் இருக்கும் போது வாய் கட்டியிருக்க வேண்டும். அதனால் நமது வைத்திய முறையில் பத்தியம் என்று வைத்திருக்கிறார்கள். உபவாசம் உடம்புக்கு நல்லது.

இதேபோலத்தான் பார்த்தல், கேட்டல், தொடுதல், மோப்பம் முதலியனவற்றையும் கட்டுப்படுத்திக் கொண்டு முறைப்படுத்திக் கொண்டு போக வேண்டும்.