பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0-அ.சீனிவாசன் 25

“சாதி மதங்களைப் பாரோம்” என்று பாரதி கூறுகிறார். அதில் பாரோம் என்பது பார்க்க மாட்டோம் என்று பொருளாகும். இங்கு பார்ப்பது என்பது கண்களால் பார்ப்பது மட்டுமல்லாமல் o ள்ளத்தாலும் உணர்வாலும் அறிவாலும் பார்ப்பதாகும்.

'சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம்” என்று பாரதி கூறுகிறார். இங்கு சந்திர மண்டலத்தியல் காண்போம் என்பது அதைப் புரிந்து கொண்டு தெளிவடைவோம் என்பதாகும். இங்கு காண்பது அதன் மூலம் அறிந்து கொள்வதும் தெரிந்து கொள்வதும் பார்க்கும் திறனில் உள்ள பண்பாகும்.

"பருதியின் பேரொளி வானிடைக் கண்டோம் பார்மிசை நின்னொளி காணுதற்கு அலைந்தோம்”

என்று காட்சியைப் பற்றி பாரதி கூறுகிறார். இவையெல்லாம் கண்ணின் செயல்களாகும்.

'விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி வேண்டியவாறுனைப் பாடுதும் கானாய்”

என்பது வாயின் செயலாகும். வாய்வழி பாடினாலும் அந்த செயல் உள்ளத்திலிருந்து எழுவதாகும். பாடுவதற்கு வாய் மட்டுமல்ல, இதர பொறிகளும் செயல்பட வேண்டியதாகிறது.

'வெற்றி கூறுமின் வெண்சங்கு ஊதுமின்”

என்பது வாயின் செயலாகும். அதற்கு இதர பொறிகளும் அறிவும் செயல்படுகின்றன. துணை செய்கின்றன.

“காந்தி சொற் கேட்டார், காண்பார் விடுதலை பணத்தினுள்ளே”

என்பதில் செவி யும், கண்களும் இணைந்து செயல்படுவதைக் காண்கிறோம்.

ஒளிபடைத்த கண், கனி படைத்த மொழி, நோய்களற்ற

_ ல் என்று பாரதி பொறிகளைப் பற்றிக் குறிப்பிடுவதைப் பாரிக்கிறோம்.