பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 அ.சீனிவாசன் 27

பாரதி தனது பல்வேறு பாடல்களிலும் இந்த ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்.

'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில் ஒன்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு'

என்றும்,

'முப்பது கோடியும் வாழ்வோம் - விழில் முப்பது கோடி முழுமையும் விழ்வோம்”

என்றும், நாட்டுமக்களின் முழுமையான ஒற்றுமையை பாரதி வலியுறுத்திக் கூறியுள்ளார்.

'முப்பது கோடி முகமுடையாள் - உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் - இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் - எனிற் சிந்தனை ஒன்றுடையாள்”

என்று அன்றைய பாரதத்தின் மக்கள் தொகையான முப்பது கோடியைக் குறிப்பிட்டு, முகம் முப்பது கோடி என்று உயிர் ஒன்று என்றும், செப்பு மொழி பதினெட்டு ஆயினும் சிந்தனை ஒன்று என்றும், நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி பாரதி பாடியுள்ளார்.

'முப்பது கோடி ஜனங்களின் சங்கம்

முழுமைக்கும் பொதுவுடமை

ஒப்பிலாத சமுதாயம்

உலகத்திற் கொரு புதுமை”

என்றும்,

"எல்லாரும் ஒர் குலம் எல்லாரும் ஓரினம்

எல்லாரும் இந்திய மக்கள்”

என்றும், பாரதி மேலும் நாட்டின், நாட்டு மக்களின் ஒற்றுமையை எடுத்துக் கூறுகிறார்.

“ஒற்றுமை வழி யொன்றே வழியென்பது

ஒாந்திட்டோம் - நன்கு - தேர்ந்திட்டோம்”