பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O அ.சீனிவாசன் 33.

'பள்ளித்தல மனைத்தும் கோயில் செய்குவோம்”

என்று பள்ளிகளை எல்லாம், கல்விக்கூடங்களை எல்லாம் புனிதமான கோயில்களைப் ப்ோல் பாராட்டிப் பாதுகாக்க வேண்டும் என்று பாரதி கூறும் போது கல்விக்கும், கல்வி கற்றலுக்கும், கல்வி நிலையங்களுக்கும், கல்விக் கூடங்களுக்கும் பாரதி அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பது தெளிவாகும்.

கல்வி சிறந்த தமிழ்நாடு என்று தமிழ்நாட்டைப் பாரதி பாராட்டுகிறார். ஒதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்றும் கூறியதும் தமிழ்த்தாயாகும்.

“தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வோம் இந்த நாட்டிலே’ என்று, 'வாழி கல்விச்செல்வம் எய்தி மனமகிழ்ந்து கூடியே” என்று அதில் கல்வி ஞானம், கல்விச் செல்வம் என்றெல்லாம் விடுதலைப்பாட்டில் பாரதி குறிப்பிடுகிறார்.

“கல்வி யைப் போல அறிவும், அறிவினைப் போல கருணையும், அக்கருணையைப் போல பலவித ஊக்கங்களும், செய்யும் திறனும்” பெற வேண்டும் என்பது பாரதியின் நோக்கு. அது கற்றதொழுகினால் தான் நிறைவேறும்.

“கல்வியென்னும் வலிமை கொண்ட கோட்டை கட்டினான் - நல்ல கருத்தினால் அதனைச் சூழ்ந்தோர் அகழி வெட்டினான்” என்று திலகரைப் பற்றி பாரதி பாடுகிறார்.

கல்வி கற்பதோடு நிறுத்தி விடக்கூடாது. அதைக் கருத்தில் பதிய வைப்பது முக்கியம். அது கோட்டைக்கு அகழிபோல் அமையும் என்பது பாரதியின் எடுத்துக்காட்டு.

கல்வி கற்றதன் பயன் அதன் படி நடத்தலாகும். அதையே பாரதி பல முறை வற்புறுத்திக் கூறியுள்ளார். கற்றதொழுகு என்னும் சொல்லின் பொருளை மனதில் கொள்வோம்.