பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பாரதியின் புதிய ஆத்திகுடி_0

14. காலம் அழியேல்

காலத்தை வீணாக்காதே! காலத்தைப் போற்று என பாரதி வலியுறுத்திக் கூறுகிறார். ஒரு தனிமனிதனுடைய வாழ்வு மிகவும் குறுகிய காலமேயாகும். நூறாண்டுகள் என்று பொதுவாக அக்காலத்தில் மனித வாழ்க்கையைக் கணக்கிட்டார்கள். இருப்பினும், மிகப் பெரும்பாலும் யாரும் நூறாண்டுகள் இருப்பதில்லை. அறுபதுக்குமேல் போய்விட்டாலே கிழப்பருவம் எட்டிவிடுகிறது. வேலையிலிருந்து ஒய்வு கொடுத்து விடுகிறார்கள். முதியோர் என்று பிரிவில் சேர்க்கப்பட்டு விடுகிறார்கள். சற்று வசதியானவர்கள் கூட அறுபதாம் கல்யாணம் நடத்தி மரியாதையுடள் ஒதுக்கி விடுகிறார்கள். பிறந்தது முதல் சுமார் இருபது ஆண்டுகள் வரை இளமைப்பருவம், மாணவப்பருவம், வாழ்க்கையில் பாதி நேரம் தூக்கத்திலும் மற்ற பாதியில் சாப்பிடவும் நண்பர்கள், மனைவி, மக்களுடன் கலந்திருக்கவும், நேரம் கழிந்து விடுகிறது. பாக்கியுள்ள நேரத்திலும் பசி, பிணி, நோய் நொடியில்லாமல் இருந்தால் நல்லது. எனவே இத்தனைக்கும் இடையில் கிடைத்த நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும்.

எடுத்த காரியம் எதையும் காலத்தில் தொடங்க வேண்டும். காலத்தில் முடிக்க வேண்டும். இமைப்பொழுதையும் வீணாக்கக்கூடாது. காலம் போனால் திரும்பி வராது. எனவே இருக்கும் காலத்தில் ஒவ்வொருவரும் தனது வீட்டிற்கும், நாட்டிற்கும், உலகத்திற்கும் நல்லது செய்ய வேண்டும். அதற்காகக் காலத்தைக் காக்க வேண்டும். காலத்தைப் பேண வேண்டும். போற்ற வேண்டும். காலத்தை வீணாக்கக் கூடாது. வீணாகக் கழிக்கச் கூடாது. உரிய காலத்தில் எதையும் செய்ய வேண்டும். செய்து முடிக்க வேண்டும். எனவே தான் காலத்தை அழியேல் என பாரதி கூறியுள்ளார். அதை நாம் க ைப்பிடிக்க வேண்டும்.

15. கிளை பல தாங்கேல்

ஒரு மரத்தில் அளவுக்கு மீறி அதிகா கா கிளைகள் இருந்தால் ஒரு பலமாக காற்று அடித்தால் பத்தின் கிளைகள் முறிந்து விடும். அல்லது பயே பய்ந்தாலும் சாய்ந்து விடும்.