பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O அ.சீனிவாசன் 35

சமுதாயச் சொல்லில் கிளை என்றால் உற்றார் உறவினர், தாயாதி, சுற்றம், குடும்பம் என்பதாகும். ஒரு தனிமனிதனோ அல்லது ஒரு குடும்பமோ எண்ணிக்கையில் பலரையும் பல குடும்பங்களையும் தாங்கி நிற்பது சுமந்து நிற்பது நல்லதல்ல. அளவுக்கு அதிகமாக குழந்தைகளைப் பெறுவதை பாரதி ஏற்கவில்லை.

“ஒருவர் கோட்டையில் அரசு அலுவலகத்தில் வேலை பார்த்தார். அந்தக் காலத்தில் மிகவும் குறைவான சம்பளம் தான். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அரை ரூபாய் சம்பள உயர்வும், வீட்டில் இரண்டு குழந்தைகளும் அதிகரித்து புரமோஷன் ஆகும்” என்று ஒரு கதையில் பாரதி கிண்டலாகக் குறிப்பிடுகிறார்.

அளவோடு பெற்று வளமோடு வாழ வேண்டும் என்பது இன்றைய புதுமொழியாகக் கூறப்படுகிறது.

சிலருக்கு சுற்றும் சூழ அவரைச் சுற்றிக் கொண்டு சுமையாக அளவுக்கு மீறிய சுமையாக அழுத்துவார்கள். அது தாங்காது நமது சொந்தக் குழந்தைகள் ஆனாலும் உரிய வயது வந்துவிட்டால், அவரவர் பொறுப்புகளை ஏற்க வேண்டும். இல்லவிட்டால் , குடும்பங்கள் நலிந்து போகும்.

இவைகளைக் கருத்தில் கொண்டே பாரதி கிளை பல தாங்கேல் என்று கூறியுள்ளார்.

16. கீழோர்க்கஞ்சேல்

கீழோர் என்றால் கீழ்த் தரமான, கேடு கெட்ட குணமுடையவர்கள், மோசமான நடத்தையுள்ளவர்கள் என்று பொருளாகும். வயதில் குறைந்தவர்கள் என்றோ, தனக்குக் கீழ் வேலை பார்ப்பவர்கள் என்றோ, ஏழை எளியவர் என்றோ ஏழ்மையும் வறுமை நிறைந்த கஷ்டமான வாழ்க்கை நிலையில் உள்ளவர் என்றோ பொருளல்ல, சமூகக் கொடுமைகள் மூலம் கீழே தள்ளப்பட்டவர்கள் என்றோ பொருளல்ல.